Header Ads



அனைவரதும் கவனத்தை, ஈர்த்த விடயம்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டுக்கு  வருகை தந்த முன்னாள் முதல் பெண்மணி திருமதி ஹேமா பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கரங்களால் பிடித்து மேடைக்கு அழைத்து சென்றமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.

மகன்  சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தபோது  தயார் கண்களங்கினார். 

மேலும் சஜித் பிரேமதாச தனது உரையில் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மக்கள் பேரணியின் போது கொலை செய்யப்பட்டமையை நினைவுக் கூர்ந்த போதும்  திருமதி பிரேமதாச கண்களங்கியது உணர்ச்சிபூர்வமான விடயமாக அமைந்தது.

இதேவேளை பிரேரணை வாசிப்பின் பின்னர் திருமதி பிரேதமதாசவை  மேடையிலிருந்து இறக்கிவிடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உதவி செய்திருந்ததும் சகலரதும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக இருந்தது.  

மேலும் மாநாட்டில்  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கலந்துக்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். பாங்காளி கட்சிகளின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரமான ரிசாத் பதியுதீன், அமைச்சர்களான  ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக ரணவக்க, பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  பலர் கலந்துக்கொண்டார்கள். 

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.