Header Ads



ஹக்கீம் - றிசாத்தை நம்பி, முஸ்லிம்கள் ஏமாற வேண்டாம் - நாமல்

அமைச்சர் ரவுப் ஹக்கீமையும், றிசாட் பதியுதினையும் நம்பி முஸ்லிம் மக்கள் ஏமாற வேண்டாம். அவர்கள் சொந்த நலனுக்காக சஜித்துடன் இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர்.

மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி பங்காளராகுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்முனை, மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பகுதிகளில் பல்வேறு தேர்தல் பிரசார கூட்டங்களில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியானால் கிழக்கில் முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகளை நிறுத்தி விடுவார் என்ற பொய்யான கட்டுக்கதைகளை எதிரணியினர் பரப்பி வருகின்றனர்.

அது முழுப்பொய். கோத்தபாய ஜனாதிபதியானதும் நானே முன்னின்று கிழக்கில் இன,மத,பேதமின்றி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

ஹக்கீமும், றிசாட்டும் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பிரச்சினைகள் அதிகமுள்ளன.

2015க்கு பின்னர் கிழக்கில் சகல அபிவிருத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனது தந்தையார் மஹிந்த கட்டிய ஒலுவில் துறைமுகம் இன்று சீரழிந்து போயுள்ளன. கல்வித்தரமும் இங்கு குறைந்துள்ளன.

தொழில் பிரச்சினை நிறையவுள்ளன. ஹக்கீமும், றிசாட்டும் ஜ.தே.கட்சியில் தங்கியுள்ளனர். அவர்களால் தனித்து ஒன்றுமே செய்ய முடியாது.

முன்னரும் அவர்கள் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் காலத்திலே தான் சஹ்ரான் பிரச்சினை வந்தது. அது மிக மோசமான சூழல்.

ஜ.தே.கட்சி வேட்பாளர் சஜித்திடம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒரு முறையான கொள்கை இல்லை, திட்டம் இல்லை.எனவே இலங்கையில் நல்ல அரசாங்கம் அமைய வேண்டுமானால் கோத்தபாயவை ஜனாதிபதியாக்குங்கள். நிம்மதியாக வாழ்வீர்கள்.

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முழுமையான நிர்வாகச் செயற்பாட்டை நாம் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுத்தருவோம்.

ஏழு மாகாணங்களிலும் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். இந்நிலையில் வடக்கும், கிழக்கும் பிரிந்து நின்று எதனையும் சாதிக்கப் போவதில்லை.

கல்முனையில் தமிழ் மக்கள் கோரி நிற்கும் பிரதேச செயலகத்தை பெற்றுத்தருவோம். உங்கள் பிரதேசங்கள் மீண்டும் அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் எதிர்வரும் தேர்தலில் கோத்தபாய ராஜபக்க்ஷவுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஆதரவு வழங்குங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. உங்கள் புத்தி மதிக்கு மிக்க நன்றி பெரியவரே.. சென்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்த பின்பு தான் நீங்கள் சொன்ன இருவரும் உங்க அப்பாவின் பக்கத்திலிருந்து வெளியே வந்தார்கள்.

    ReplyDelete
  2. கோட்டா வந்தால் இந்த நாமலே காணாமல் பேய்விடுவான் - அப்போதுதான் இந்த நாமலின் கனவு கலையும் - அப்போது புரிந்து என்ன பிரயோசனம் ?

    தவிர - இனவாதிகளின் ஒட்டு மொத்த கூட்டணியே அந்த மொட்டு. இதற்குமேல் என்ன தேவை மேலும் சொல்ல.

    ReplyDelete

Powered by Blogger.