Header Ads



மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும்  இலங்கையர் நாடு திரும்புவதற்கா டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மலேசிய அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக  அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.  

தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்று அந்நாட்டின் குடிவரவு  குடியகல்வு சட்டதிட்டங்களை மீறியவர்களை அவர்களது தாய்  நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காகவே இந்த கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   தெரிவித்துள்ளது.   

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31  ஆம் திகதி வரையான 5 மாத கால அவகாசமே இவ்வாறு  வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் வீசா இன்றி  சட்டவிரோதமான முறையிலும், மலேசிய  விதிமுறைகள் சட்டதிட்டங்களை மீறியும் அங்கு  தங்கியிருப்பவர்களுக்கு எதிராகவே இந்த  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.  

அவ்வாறு சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களுக்கு  கடிதம் மூல அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்பதுடன்  , அவர்களிடமிருந்து நிர்வாக கட்டணமாக சுமார் 30 ஆயிரம்  ரூபாய் (700 ரிங்கிட்)  கட்டணமும் அறவிடப்படவுள்ளது.   

அதேவேளை அவர்கள் நாடு  திரும்புவதற்கான கடவுச்சீட்டு மற்றும்   அவசர வீசா என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளது.  

இலங்கை பிரஜைகள்  இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருப்பார்களாயின் மலேசிய  அரசாங்கம்  வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலத்தை தகுந்த முறையில் உபயோகித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் 00603-20341705  மற்றும் 00603-20341706 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக    தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.  

No comments

Powered by Blogger.