Header Ads



யார் சார்பாக, ஞானசாரர் செயற்படுகிறார்...? அமில தேரர் மீதும் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சார்பில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கோத்தபாய தனது முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ள படைவீரர்களை விடுதலை செய்வதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தம்பர அமில தேரர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தம்பர அமில தேரரின் கருத்துக்கு ஞானசார தேரர் பதில் வழங்கியுள்ளார்.

அதன்படி, 30 ஆண்டுகள் போரில் பாதிக்கப்பட்ட அனைவரின் இதயத்திலும் படைவீரர்கள் தொடர்பில் கௌரவம் உள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு ஏற்பவே தீர்மானங்கள் எடுக்க்கப்பட்டன.

தம்பர அமில தேரர் போன்றவர்கள் சிங்கள பௌத்த கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.