Header Ads



யாழ் - குருநகரில் சக்திவாய்ந்த, வெடிப்பொருட்கள் மீட்பு

கடற்படையினரால் யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (03) இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையால் யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் அதனை சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் இருந்து 1 கிலோ 30 கிராம் எடை கொண்ட சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பிலான மெலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments

Powered by Blogger.