Header Ads



ஹிஸ்புல்லாவும், அப்துல் ராசிக்குடன் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கவில்லை - பொதுஜன பெரமுன


பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எம்முடன் இணையவில்லை என கோத்தபாயவின் தேர்தல் பிரச்சார பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சர்ச்சைக்குரிய நபர்கள் ஆதரவு வழங்குவதாக பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் டள்ஸ் அலகபெரும நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் என வெளியாகும் செய்தியை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புத்த பெருமான் தொடர்பில் தவறான கருத்து வெளியிட்ட அப்துல் ராசிக் என்பவர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பதாக பலர் தெரிவித்த கருத்திற்கு கண்டனம் வெளியிடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.