Header Ads



அரசாங்கத்திற்குள் இருந்தவர்களே, ராஜபக்சவினரை காப்பாற்றியுள்ளனர் - மங்கள

ராஜபக்சவினருக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ரவி வைத்தியாலங்கார ஆகியோர் கோத்தபாய ராஜபக்சவின் மேடையில் ஏறியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவை வழக்குகளில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

கோத்தபாயவுக்கு எதிராக பீ அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தான் தடுத்ததாக விஜயதாச ராஜபக்ச அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதன் மூலம் ராஜபக்சவினரை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

அத்துடன் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ரவி வித்தியாலங்கார, வழக்குகளுக்கு தடைகளை ஏற்படுத்தி, குற்றவாளிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்திகாரி தற்போது பொதுஜன பெரமுனவின் மேடையில் இருக்கின்றனர். திருடர்களை பிடிக்க நாங்கள் நிமியத்த பிரதானி கடந்த காலம் முழுவதும் கோத்தபாய மற்றும் ராஜபக்சவினரின் முகவராக இருந்துள்ளார் என்பது ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Are you admitting that your government was unable to stop these irregularities which happened within your government? If so how are you going to convince people that they won’t happen again?

    ReplyDelete

Powered by Blogger.