Header Ads



"கோத்தபாயவுக்கு அதிகளவான மக்களின் ஆதரவும், ஈர்ப்பும் கிடைத்துள்ளது"


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைக்க உள்ள சிங்கள வாக்குகளை தடுக்க சர்வதேச வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பதாகவும் 50 முதல் ஒரு லட்சம் வரை சிங்கள பௌத்த வாக்குகள் அவருக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கெஹெலிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு அதிகளவான மக்களின் ஆதரவும் ஈர்ப்பும் கிடைத்துள்ளது. இதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கையினால், நாடு மிகப் பெரியளவில் ஸ்திரமற்ற நிலைமைக்கு செல்லும் எனவும் கெஹெலிய மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. WETTRI PETRAAL MAKKALIN AADHARAVU
    THOOLWI ADAINTHAL SARVATHESATTHIN SUULCCHI
    ENNA MODO PAYITTHAYAM DAA ITHU

    ReplyDelete
  2. u...fooool...unakku arakka vera ondume illayaadaa paradesi...!!

    ReplyDelete

Powered by Blogger.