Header Ads



நாம் தேசியவாதிகள் - நாமல்

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமானால் ஜனாதிபதி என்பவர் அவர்களின் காலடிக்கு செல்வதனை விடுத்து ஒரு வலுவான பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

குருணாகலையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை இனவாதிகள் என கூறுகின்றனர். ஆனால் நாம் தேசியவாதிகள். 

மஹிந்த ஐ.தே.காவுடன் மாத்திரம் மோதவில்லை மாறாக ஜே.வி.பியுடனும் மோதியுள்ளார். 

ஜே.வி.பி என கூறுவது தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் அல்லர் மாறாக அவர்கள் சிங்கள இனத்தவர்கள். 

தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனுடனும் மோதினார். 

வேட்பாளர்கள் தமது சரியான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரம் போதும் அவர்களின் காலடிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. neengal theshiyavathi.. nangal payangara or theeviravathikal thane?

    ReplyDelete
  2. இந்த நாட்டின் அழகான, கண்ணியமான தமிழ், சிங்கள குடும்பங்களைச்சேர்ந்த பலபெண்மணிகளை ஏமாற்றி கற்பழித்து கைவிட்ட இந்த காமுகச் சைத்தானுக்கும் அடுத்த முறை பாராளுமன்றத்துக்குச்செல்ல முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்க க்கூடாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.