Header Ads



ஒரு சதத்தையேனும் நான் திருடவில்லை, திருட்டை ஒழிக்க ஒருமுறை எனக்கு அதிகாரத்தை தாருங்கள்


நாட்டை கட்டியெழுப்புவதானால் திருடர்கள் அற்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தம்புத்தேகமவில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் கலந்து கொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு இதுவாகும். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருட்டை ஒழிக்க ஒரு தடவை தனக்கு அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்திருந்தார். 

பொதுமக்களின சொத்துக்களில் ஒரு சதத்தையேனும், தான் திருடவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 

இதன் காரணமாக ஆட்சியாளர் திருடக்கூடாது எனவும், ஆட்சி திருட்டு இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை யாருக்கு செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். 

1 comment:

  1. ஜேவிபி நூற்றுக்கு 6% - 8% வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இடமிருக்கிறது. அவர்கள் தனது கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து வெளியே வந்து பொதுவான நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற வேண்டும். அவருடைய முக்கிய இலக்கு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து நாட்டை ஆட்சி செய்வதற்கு இலகுவான அழுக்கற்ற ஊழலற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுப்பது. குறிப்பிட்டு சொல்லப்போனால் பாகிஸ்தானில் இம்ரான்கான் அங்கு வாழும் மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சியைக் கைப்பற்றினார் அதே முறையில் இவர்கள் தமது இலக்கை அடைய வேண்டும். மாறாக பழைய பல்லவியை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்தால் அது ஒருபோதும் கூடுவதற்கு சாத்தியமே இல்லை.
    எனவே கேவிபி நல்ல முறையில் சிந்தித்து நாட்டுக்கு பொருத்தமான முறையில் தனது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் எமது நாட்டு மக்கள் ஜேவிபி இடம் நாட்டை கொடுப்பதற்கு முன்வருவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.