Header Ads



வாக்குச் சீட்டிலிருந்து, வாசம் வருமா..?

சகல இன மக்களின் பாதுகாப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

2 அடி 1 அங்குளம் நீளமான வாக்குச்சீட்டில் நம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக் கூடிய ஒரே வேட்பாளரே இருக்கின்றார். அவர் கோத்தபாய ராஜபக்ச.

வாக்குச் சீட்டு நிளமானது என்பதால், வயது வந்த முதியவர்களுக்கு வாக்குச் சீட்டின் மாதிரியை கொண்டு வந்து காட்டி எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பசறையில் நடந்த கூட்டம் ஒன்றில் நான் கூறினேன்.

அப்போது, வயதான ஒருவர் தனக்கு கண் தெரியாது. ஆனால், தாமரை மொட்டின் வாசத்தை அறிந்து நான் வாக்களிப்பேன் எனக் கூறினார்.

வாக்குச் சீட்டில் இருக்கும் ஏனைய அனைத்து சின்னங்களும் துர்நாற்றம் வீசுபவை. தாமரை மொட்டிலேயே வாசம் இருக்கின்றது என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ம்ம்.. வாக்குச் சீட்டிலிருந்து வாசம் வரலாம். ஆனால் யார் வென்றாலும் இனவாதம் எனும் துர்நாற்றம் வராமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பொறுப்பு மிக்க அரசியல்வாதிபோலவா பேசுறாரு இந்த சாம்பிராணி
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.