Header Ads



கோத்­தா­ப­ய­வுக்கு இன்னும், நெருக்­க­டிகள் வரலாம் - சமல் அனுப்பிய முக்கிய கடிதம்


பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக்ஷ தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு முக்­கிய கடி­த­மொன்றை எழு­தி­யுள்ளார். 

குறித்த கடி­தத்தில் கட்சி சார்­பாக நிய­மிக்­கப்­பட்ட வேட்­பாளர் ஒருவரின் பெயரில் கட்­டுப்­பணம் செலுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவரு­டைய பெயரை மாற்றி அதற்­காக பிறி­தொ­ரு­வரின் பெயரை உள்ளீர்க்க முடி­யுமா என்­பது பற்றி விளக்­க­ம­ளிக்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார். 

இக்­க­டி­தத்­தினை பெற்­றுக்­கொண்ட ஆணைக்­கு­ழு­வா­னது, கட்­டுப்­பணம் செலுத்தும் செயற்­பா­டுகள் நிறை­வ­டைந்­ததன் பின்னர் உரிய பதிலை கலந்­து­ரை­யாடி வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. 

முன்­ன­தாக பொது­ஜன  பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தா­பய ராஜ­ப­க்ஷவின் குடி­யு­ரி­மைக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு நேற்று முன்தினம் 6  மணிக்கு தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நண்­ப­கலில் அறி­வித்­த­தை­ய­டுத்தே முன்­னேற்­பா­டாக சமல் ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான கட்­டுப்­ப­ணத்­தினை செலுத்­தி­யி­ருந்தார். பின்னர் நீதி­மன்றம் அவ்­வ­ழக்­கினை தள்­ளு­படி செய்­துள்­ளது. 

இந்­நி­லையில் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, சமல் முன்­னேற்­பா­டா­கவே கட்­டுப்­ப­ணத்­தினை செலுத்­தி­ய­தா­கவும் பின்னர் மீளப்­பெ­றுவார் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

எனினும் அடுத்­து­வரும் தினங்­களில் கோத்­தா­ப­ய­வுக்கு நெருக்­க­டிகள் உரு­வா­கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வாபஸ் அறிவிப்பினை உடனடியாக விடுக்க வேண்டாம் என்று சமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. 

(ஆர்.ராம்)

No comments

Powered by Blogger.