Header Ads



வங்கியின் மோசடி தொடர்பில், சஜித் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை மறந்துவிடக்கூடாது

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித்பிரேமதாஸ நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக கூறுவது கட்டுக்கதையாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எக்ஸா, சோஃபா , சிங்கபூர் உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் சர்வதேச நாடுகளில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரமதாஸ குறிப்பிடுகிறார்.

அவ்வாறென்றால் அமைச்சர் மலிக் சமரவிக்கரம சிங்கப்பூர் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது ஐக்கிய தேசிய கட்சியின்; உப தலைவராக செயற்படும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிந்திருக்கவில்லை என கூறுவது வேடிக்கையாகும்.

அவர் இந்த ஆட்சியில் இருப்பதை மறந்து தாம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை போல் கருத்துக்களை வெளியிடுகிறார்.

ஆகவே சஜித்பிரேமதாஸவும் மத்திய வங்கியின் மோசடி தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே அவர் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் அதிலும் மோசடியாளர்கள் பங்குவகிப்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.