Header Ads



யாரைத்தான் நம்புவதோ...???

எந்தக் காரணிகளுக்காக மகிந்தவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்களோ,

ஊடகங்கள் எதிர்த்து செயற்பட்டனவோ,

அரசியல்வாதிகள் ஒன்றுபட்டார்களோ 

அந்தக் காரணிகள் தீர்க்கப்பட்டு விட்டனவா?

நீதி கிடைத்து விட்டதா?

இன்னும்‌இல்லை

ஊடகவியளாலர் கொலை,

விளையாட்டு வீரர் கொலை

மர்மங்கள் துலங்கிவிட்டனவா?

வெள்ளை வான் கடத்தல்கள் முடிச்சு அவிழ்க்கப்பட்டு விட்டதா?

கிறீஸ் பூதங்களின் கிறீஸ் அகற்றப்பட்டு அடையாளம் காணப்பட்டதா

முள்ளிவாய்க்கால் தீர்வு கிடைத்து விட்டதா?

எதுவுமே தீர்க்கப்படவில்லை 

ஆனால் இவையெல்லாம் தீர்ப்போம் என்று வாக்குறுதி அளித்து,மக்கள் வாக்களித்து

நிறைவேற்று அதிகாரத்தை பெற்றவர் அதே பதவியில்

பாராளுமன்றத்தை கைப்பற்றி சட்டத்துறையின் பிரதமராக இன்னுமொருவர்  அதே பதவியில் இன்னும் இருக்கின்றார்கள்

ஆனால் பிரச்சினை எதுவும் தீர்க்கப்படவில்லை,

அன்று எல்லோரும் ஒன்று திரண்டு யாருக்கு எதிராக வாக்களித்தார்களோ 

அவர் சட்டம் இடம் கொடுக்காததால் தன் தம்பியை நிறுத்தியிருக்கிறார், தானே ஆட்டுவிக்கிறார்

யுத்தத்தை முடிவுறுத்தி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை காப்பாற்றியதாக கூறுகின்ற ஒரே ஒரு தகைமை வைத்துக் கொண்டு இராணுவ இயல்புகளோடு வளர்ந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  ஒரு முனையில்

தலைமைதுவம் தாங்கி பல தோல்விகளைக் சாதித்த சாதனை படைத்து,ஆகக் குறைந்தது கட்சித் தலைமைத்துவத்தையாவது இறுதி வரை தக்க வைத்துக் கொண்டிருத்தலே வெற்றி இலக்கு என தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைமைத்துவ பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு 

தந்தை பிரதமராக இருந்து செய்த சேவையினை மூலதனமாகக்  கூறிக் கொண்டு

மேற்கூறப்பட்ட மர்மங்களுக்கெல்லாம்  

ஆட்சியை மாற்றுவோம்,
ஜனாதிபதியை மாற்றுவோம்
என பிரசாரம் செய்து புதிய ஜனாதிபதியை பதவிக்கமர்த்தி தானும் பாராளுமன்ற ஆட்சியின் பங்காளராக இருந்து எதுவும் செய்யாமல் 

வீடமைப்பு நிர்மான சேவையையும்,தந்தையின் சேவைகள், மரணம் என்பவற்றை  தேர்தல் மூலதனமாக கொண்டு போட்டியிடும் இன்னொருவர் அடுத்த முனையில்,

பாராளுமன்றத்தில் எதிர்பக்கத்திலேயே நீண்டகாலம் இருந்து ஆளுங்கட்சிகளை புள்ளிவிபரங்களோடு உச்சஸ்தாயியில் உரக்க முழக்கமிடுவதை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கும் இன்னொருவர்,எதிர் தரப்பில் இருந்து  முழக்கமிடுவதே மிக இலகுவானது,அதிகாரம் கைக்கு கிடைக்கும் போது செயலாற்ற முடியுமா என்று மக்களது சிந்திக்கும் ஆற்றலை தனது பேச்சாற்றலால் மறைத்து நிற்கின்றார்

இரண்டு முனை போட்டியில் நிற்பவர்களுக்கிடையிலான அதிருப்தி வாக்குகளையும்,புதிய இளம் வாக்குகளையும் வைத்துக் கொண்டு சிறுபான்மை வாக்குகளை திரட்ட முயற்சிக்கின்றார்

இன்னும் முப்பத்திரண்டு பேர் சும்மா‌ சும்மாவாம்,

எல்லோரும் இப்பொழுது உரக்க கூறுகிறார்கள்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உறுதி,
சிறுபான்மையினர் உரிமை பாதுகாக்கப்படும்,

எல்லோருக்கும் ஒரே நீதி என்கிறார்கள்

மறு பக்கம் ஒரே நாடு,ஒரே சட்டம் ( எக்க ரட்டயக்,எக்க நீதியக்) என்று கோஷம் போட்டவர்கள் அதை மறந்தவர்கள் போல் 

நான்காவது இடத்திற்கு எதிர்பார்க்கப்படும் இன்னொருவர் தளபதியாக இருந்து ஓய்வு பெற்று பதவியின் சூடு ஆறு முன்பே போட்டியிட முன் வந்து அமைதியும்,பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்கிறார்.

நால்வரும் சொல்வதெல்லாம் ஒன்றுதான் 
நாட்டில் அமைதியும்,பாதுகாப்பும் உறுதிப்படுதப்படும்

சிறுபான்மையினர் உரிமைகளோடு,பாதுகாப்பாக வாழ முடியும்.

இனப்பாகுபாடு ஒழிக்கப்படும் என்கிறார்கள்.


ஆக எம்மிடம் இருக்கும் ஒரே கேள்வி இதுதான்

நால்வருக்கும் ஆளுமை இருந்தது

மக்களை ஒன்று திரட்டும் சக்தி இருந்தது 

அமைச்சர் என்ற அதிகாரம் ஒருவரிடம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் பாதுகாப்புதுறைக்குள் கணிசமான செல்வாக்கு அடுத்தவரிடம்

அண்ணன் முன்னாள் ஜனாதிபதி என்ற மக்கள் செல்வாக்கும் கூடுதலாக

இன்னொருவருக்கு இளைஞர்களை திரட்டி வீதியில் இறங்கி நடத்தக்கூடிய ஆளுமையும்,இளைஞர் சக்தியும்

நான்காமவருக்கு இராணுவத்தை கட்டளையிடும் நேரடி அதிகாரம்,பதவி 

நான்கு பேருக்கும் இவ்வளவு சக்தி இருந்தும்,இனவன்முறை இனி‌ஒரு முறை இடம்பெறாது,அமைதி உறுதி என்பவர்கள் 

ஏன் அன்று சிறுபான்மை சமூகம் தாக்கப்படும் போதும்,எரிக்கப்படும்‌ போதும் அவற்றை நிறுத்த வீதிக்கு இறங்கவில்லை,

உங்கள் ஆளுமைகளை, அதிகாரங்களை,மக்கள் சக்தியை பயன்படுத்தவில்லை.

அதிகார மாற்றம் ஒன்றை நாம் எதிர்பார்க்கின்றோம். 
ஆனால் பாதுகாப்பும்,அமைதியும் என்ற கேள்விக்குறியோடு,யாரைத்தான் நம்புவதோ என்ற கனத்த நெஞ்சோடு

அஜ்மல் மொஹிடீன்

1 comment:

Powered by Blogger.