Header Ads



பர்தாவுடன் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு - பெண் அதிகாரி அடாவடி, இப்பாகமுவயில் சம்பவம்

-JM. Hafeez-

பொதுவான பாடசாலை சீருடையில் ஒரு அங்கமான 'பர்தா' அணிந்த முஸ்லிம் மாணவிகளை பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்காது முற்றாக அதனைக் அகற்றிய பின்பே பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகல் மாவட்டத்தில் உள்ள இப்பாகமுவ கல்வி வலயத்தில் (15.10.2019) இடம் பெற்றுள்ளது. 

பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி மாணவிகள் 8 பேர் தொழில் நுட்பம் தொடர்பான பரீட்சை திணைக்களத்துடன் தொடர்புடைய பொதுப் பரீட்சை ஒன்றிற்கு இப்பாகமுவ கவிகமுவ மத்திய கல்லூரிக்கு பரீட்சை எழுதச் சென்றுள்ளனர். அதன்போது அங்கு பரிட்சை மண்டப மேற்பார்வையாளராக இருந்த பெண் அதிகாரி ஒருவரே பர்தாவை (முகம் மூடப்படாத ஆடை) அகற்றும் படி கூறியுள்ளார். சங்கடத்துக்குள்ளான மாணவிகள் தலையை திறந்தும் கூட, முடியாது என்று முற்றாக அவ்ஆடையை அகற்றும்படி கேட்டுள்ளார். செய்வதறியாது அவர்கள் பர்தாவை நீக்க நிர்பந்திக்கப்பட்டடுள்ளனர். 

மனம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர். சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் 100 சதவீதம் முஸ்லிம் மாணவிகள் பொதுவாக அணியக் கூடிய இவ் ஆடைக்கு அவ்வாறு தடை வித்தது எந்த அடிப்படையில் என பெற்றோர் விசனம் தெரிவித்து வருகின்றனர். 

முகம் மூடும் அபாயா கூட சில சந்தர்பங்களுக்கு அளுமதிக்கப்பட்டுள்ள நாட்டில் பரீட்சை மண்டபத்தில் பாடசாலை சீருடையையும் மதிக்காது அகற்றக் கூறிய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும் எனப் பெற்றேபர்கள் வேண்டுகின்றனர். இது போன்ற விடயங்கள் வேறு சந்தர்ப்பங்களில் பாரிய விளைவுகளையும் ஏற்படுத்த இடமிருப்பதால் இப்பிரச்சினையை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் எனப்பலர் வேண்டுகின்றனர்.    


7 comments:

  1. Need to file a case soon....

    ReplyDelete
  2. உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. Not only that taking action agaist that lady, government should keep that exam again to those students.

    ReplyDelete
  4. குட்டக் குட்ட குனிபவனும் மடையன்,குனிந்து கொடுப்பவனும் மடையன்.உரிய நடவடிக்கை எடுங்கள்.

    ReplyDelete
  5. Let’s get proper action on this picking lady supervisor

    ReplyDelete

Powered by Blogger.