Header Ads



நான் சுதந்திரக் கட்சிக்காரன், பொதுஜன பெரமுனவில் எப்போதும் இணைந்துக்கொள்ள போவதில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தான் எப்போதும் இணைந்துக்கொள்ள போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று -18- நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரி மத்துகமையில் நடக்கும் உண்ணாவிரதம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனது ஊரில் எமது கட்சியினர் பொதுஜன பெரமுனவில் இணையுமாறு வலியுறுத்துகின்றனர். எனினும் நான் எடுத்த தீர்மானத்தை மாற்றப் போவதில்லை. தற்போதுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக இல்லாமல் போய்விடும். எனவே பொதுஜன பெரமுனவுக்காக பணியாற்றுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தேன்.

அந்த முடிவில் மாற்றம் இருக்காது. தேர்தலுக்கு பின்னரும் அதே நிலைப்பாட்டிலேயே இருப்பேன். நான் சுதந்திரக் கட்சிக்காரன், பொதுஜன பெரமுனவுக்கு வர மாட்டேன் என மகிந்த ராஜபக்சவிடமும் கூறினேன். பொதுஜன பெரமுன என்ற கட்சி, மகிந்த ராஜபக்சவின் கையிலேயே தங்கியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஏனையோர் இலங்கையின் பிரஜைகள் அல்ல. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக வெளிநாடு செல்ல முடியும். ஆனால் எமக்கு செல்ல எந்த நாடும் இல்லை. இந்த நாடு மட்டுமே இருக்கின்றது.

கஷ்டத்தில் விழுந்த நேரத்தில் நாட்டை விட்டு சென்று அவர்களின் செயலில் அதனை ஒப்புவித்தனர். சுதந்திரக் கட்சியில் இறுதியாக எஞ்சும் நபர்களுடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல நான் அர்ப்பணிப்புகளை செய்வேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.