Header Ads



கோத்தபாய கைது செய்யப்படவிருந்தார், ஜனாதிபதி மூலம் தடுத்து நிறுத்தினேன் - விஜயதாச


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படவிருந்த போது அததனை தாம் தடுத்து நிறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவை கைது செய்யும் நோக்கில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் கையொப்பமிட்டிருந்த ஆவணம் முன்னோக்கி நகர்வதனை தாம் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவை கைது செய்வதற்கான ஆவணமொன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் இது குறித்து தாம் குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஒருவரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரடன்வின் வீட்டில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கோத்தபாயவை கைது செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும், தாம் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து இதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. This is a laughable one. Why is he telling now? We know you all protected all robbers and murderers.

    ReplyDelete

Powered by Blogger.