Header Ads



கத்தாரில் இலங்கையர்களின் திடீர், மரணங்கள் குறித்து தூதுவருடன் கலந்துரையாடல்


CWF கத்தார் அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் கத்தாருக்கான இலங்கை தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கத்தார் இலங்கை தூதராலயத்தில் நடைபெற்றது.

இதன் போது CWF Qatar அமைப்பு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் குறித்தும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும்  CWF Qatar அமைப்பின் தலைவர் முஹமட் அக்ரம் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து அண்மைக் காலங்களாக கத்தாரில் இடம்பெற்று வரும் இலங்கையர்களது திடீர்  
மரணங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வாறு திடீர் மரணங்கள் நிகழுமிடத்து  CWF Qatar அமைப்பு எவ்வாறு இதனை கையாளுகின்றது  என்பது குறித்தும்  CWF Qatar அமைப்பின் தலைவர்  இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி.....

இவ்வாறான திடீர் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றும்  இதற்கு CWF Qatar அமைப்பின் உதவி மிகவும் அவசியம் என்றும் வழியுருத்தினார். மேலும் இவ்வாறான நிலைமை குறித்து கூடிய கவனம் செலுத்துவதாகவும் இவ்வாறான நிலைமைகளை கண்டறிவதற்கு மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் CWF Qatar அமைப்பு  மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் நானும் எனது தூதரக அதிகாரிகளும் துணை நிற்போம் என கத்தாருக்கான இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி தெரிவித்தார்.


(கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்)


3 comments:

  1. The reason is eating (Jung food)..... specialty during night time....sleeping late night....wasting time in mobile phone....many addicted for mobile phone....hasbunallahu wanihmal wakeel....

    ReplyDelete
  2. இதற்கான ஒரு முக்கிய காரணம் இளைஞர்களின் உணவுப்பழக்கம். இந்த மரணங்கள் கூடுதலாக வார இறுதி நாட்களில்தான் பதியப்பட்டுள்ளது

    இவர்கள் வார இறுதியில் ஒன்று கூடீ எண்ணெய் உணவுளை உண்டு விட்டு மென்பானங்களை அருந்துகிரார்கள். பின்பு குளிரூட்டப்பட்ட அறைகளில் உணவு மயக்கத்தில் தூக்கம். தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு இலக்காகி மரணம்

    ReplyDelete
  3. life is very difficult and no good food here

    ReplyDelete

Powered by Blogger.