Header Ads



கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்கா - கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்காக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.