Header Ads



சஜித் ஜனாதிபதியாகி கட்சியின் அதிகாரத்தை, அவரிடம் கொடுக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் - திஸ்ஸ எச்சரிக்கை

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வெற்றி பெரும் பட்சத்தில் மக்களின் வெற்றித் தலைவருக்கு கட்சியின் அதிகாரத்தை கொடுக்காவிட்டால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எந்தவொரு நிபந்தனையுடனும் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படவில்லை. நிபந்தனையுடன் தெரிவு செய்யப்பட்டதாக கூறுவது மற்றொரு செயற்பாடாகும்.

மேலும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு 2015 இல் மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருந்தார்கள். அதேபோன்று எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்.

2015ஆம் ஆண்டு ஐதேகவின் பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினால் கட்சிக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை நான் நன்றாக அறிந்து வைத்திருந்தேன்.

ஆகவே அதற்கு எதிராக நான் செயற்பட்டமையினால் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த ஊடகங்களின் வாயிலாக எனக்கு சேறுபூச முற்பட்டமையினால் கட்சியின் இறைமைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோன்று, 2015ஆம் ஆண்டு ஐ.தே.கவில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தேன். அதனை புறந்தள்ளிவிட்டு பொது வேட்பாளரை களமிறக்க பாரிய முயற்சியை முன்னெடுத்தனர்.

அதனைத் தடுப்பதற்கு நான் எதிர்பபு தெரிவித்தமையினாலும் எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த இரு காரணங்களினாலேயே கட்சியிலிருந்து நான் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நீதிமன்றத்தில் பாரதூரமான வழக்குகள் உடைய நிதிமன்றினால் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தான் அவருடன் இணைத்துக்கொள்வதில்லை என பகிரங்கமாகமேடையில் பேசித்திரிந்த சஜித், பகிரங்கமாக தன்னுடைய வாக்குறுதியை மீறி திஸ்ஸ அத்தனாயக்காவைச் சேர்த்துக்கொண்டது பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்குத் துரோகமாகும். திஸ்ஸ ஏற்கனவே களவாக பிரதமருடைய கையொப்பத்தை இட்டு நிதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர். இப்போது கொஞ்சம்சொற்ப அதிகாரம் கிடைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு பிரதமரைக் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டார். இதுபோன்ற ஊத்தைகளைச் சேர்த்து மக்களிடம் இருக்கும் ஓரளவான நம்பிக்கையையும் அகற்றிக்கொள்ளவேண்டாம்.

    ReplyDelete
  2. innum UNP ku SAJITH ku soothu sorira MUSLIM val irukkum muttum iduvum nadakkum iduku melayum nadakkum..

    ReplyDelete

Powered by Blogger.