Header Ads



கோத்தபாயவுக்கு பதிலாக மாற்று, வேட்­பாளரை தயாராக வைத்திருக்க திட்டம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­பதால் மாற்று வேட்­பாளர் ஒரு­வரை தயார் நிலையில் வைத்­தி­ருப்­பது குறித்து எதி­ரணி ஆலோ­சித்­துள்­ளது. 

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பிர­ஜா­வு­ரிமை தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனு மீதான விசா­ரணை  நாளை 2 ஆம் திகதி முதல் இடம்­பெ­ற­வுள்­ளது. 

4 ஆம் திகதி  தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் இடைக்­கால தடை­யுத்­த­ரவு ஏதேனும் வழங்­கப்­பட்டால் மாற்று வேட்­பாளர் ஒரு­வரை தயார் படுத்­து­வது நல்­லது என்ற நிலைப்­பாட்டை எதி­ரணி கொண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் நேற்­று­மாலை எதி­ர­ணியின் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

1 comment:

  1. It will be a Another Person form the same Family.

    Democracy withing the family and Even not withing the party.. So that can not choose other members in the party as may be no one else out side this family from the party are qualified for the position.

    Will wait and see...

    Looks like everything is pre-planned ...

    ReplyDelete

Powered by Blogger.