Header Ads



நாட்டை உலுக்கிய வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டு கஹவத்த, கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு என்பவருக்கே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சியினால் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் 200 பக்கங்கள் உள்ளடங்கிய வழக்கின் தீர்ப்பின் ஊடாக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் வைத்து நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு மற்றும் அவரது மனைவியான அசோக சந்தனி எனும் பட்டி என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபரான குற்றவாளியின் மனைவிக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.