Header Ads



சிங்கபூர் செல்ல நீதிமன்றில், அனுமதி​ கோரியுள்ள கோட்டாபய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கபூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி​க்கோரியுள்ளார்.

ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே சிங்கபூருக்குச் செல்வதற்கு அனுமதிகோரியுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது, நிதி மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு, தடைச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. குடியுரிமைக்கான ஆவணங்கள் போலியானது என்பது தெ ளிவான பின்னர் அடுத்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அதனைத் தவிர்க்க அவரசமாக சுகயீனம் ஏற்பட்டு சிங்கப்பூர் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமாம்.இலங்கையில் இருக்கும் டாக்டர்கள் பிரயோசனமில்லையாம்.

    ReplyDelete

Powered by Blogger.