October 23, 2019

கோத்­தாபய ஜனா­தி­ப­தி­யானதும் அடிப்­ப­டை­வா­தத்தை, போதிக்கும் கற்கை நிலை­யங்கள் அழிக்கப்படும் - ரத்ன தேரர்

தேசிய  பாது­காப்­பி­னையும் பொரு­ளா­தா­ர­த்­தி­னையும்  பல­மான  தலை­மைத்­து­வத்­தி­னாலேயே கட்­டி­யெ­ழுப்ப முடியும். தேசிய  உற்­பத்­தி­க­ளுக்கும் தேசிய மர­பு­ரி­மை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய  ராஜபக்ஷநிச்­சயம்  ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார்.

கட­வத்த நகரில்  இடம்பெற்ற  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   அவர்  மேலும் உரை­யாற்­று­கையில்,

இரா­ணு­வத்­தி­ன­ரது பலத்­தி­னையும்    இளை­ஞர்­க­ளி­னது பலத்­தி­னையும் ஒன்­று­ப­டுத்தி   நிச்­சயம் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும். தேசிய பொரு­ளா­தா­ரத்­தி­னையும்   தேசிய பாது­காப்­பி­னையும் முன்­னேற்றும் தேவை  தற்­போது  ஏற்­பட்­டுள்­ளது.  கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக்கொண்டே  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்தேன்.

அடிப்­ப­டை­வாத  கருத்­துக்­களை போதிக்கும்   கற்கை  நெறி­க­ளையும், அடிப்­ப­டை­வா­தத்­தி­னையும் முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க வேண்டும்.   குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்கள் தேசிய  உற்­பத்­தி­க­ளையும் இன்று   வீழ்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளார்கள். இந்­நி­லைமை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

நாட்­டுக்கு எதி­ரான  ஒப்­பந்­தங்­களை   அர­சி­யல்­வா­திகள் இன்று வெற்­றி­க­ர­மாக  செய்­துள்­ளார்கள்.   நாட்­டுக்கு  எதி­ரான  ஒப்­பந்­தங்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிக்கப்படும்.   பலமான  தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் அனைத்து இன  மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்தில் தேசிய  நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள் என்றார். 

4 கருத்துரைகள்:

Adu sari nagga paatuttu chumma erippam ok neegga nadattuga

உங்கள் தீவிர பிரச்சாரத்தால் பெரும் பின்னடைவை தான் கோத்தா அடைவார். பிரச்சாரத்தின் மூலம் கிடைக்கும் (சிங்கள) வாக்குகளை விட இழக்கும் (முஸ்லீம்) வாக்குகள் தான் அதிகம்.

பேருவலை வாழ் சோனகச் சமூகமே, உங்கள் ஊரில் இருந்து இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் அறிவொளி பாய்ச்சும் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு ஆப்புவைக்க இந்த காபிர் சனாதிபதி வேட்பாளன் துவேச கோதாவுடன் இணைந்து இந்தகைங்கரியத்தைச் சாதிக்க தயாராகின்றான். எனவே,பேருவல, சீனன்கோட்டையில் வாழும் எந்த ஒரு முஸ்லிம் ஆண்களும்பெண்களும்கோதாபாயாவுக்கு வாக்களிக்க தயாராகி இருந்தால் உடனடியாக உங்கள் சிந்தனையை சீர்தூக்கி ஆராய்ந்து இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்புக்குத் தொல்லையில்லாத ஒருவரை சனாதிபதியாக நியமிக்க உதவுங்கள்.

குயில் கூவியதற்காக அது குயில்கூடாகப்போரதுயில்ல...அது காகக்கூடுதான்... அதமாதிரிதான்

Post a comment