Header Ads



அதிகாலை தொலைப்பேசி அழைப்பெடுக்கும், சஜித் பிரேமதாசவினால் எமக்கு பாரிய தொந்தவு - ரஞ்சன்

ஐக்கிய தேசியக் கட்சி மீதுள்ள பாரிய குற்றச்சாட்டான மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான சர்ச்சை 90 வீதமளவுக்கு தீர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி பிணை முறி கொள்வனவின் போது 11 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் அதில் 12 பில்லியனை திரட்டியுள்ளதாகவும் அதற்கமைய 26 நிறுவனங்களை தடைசெய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தனது கட்சியிலும் பிழைகள் இருப்பதாக ஏற்றுக்கொண்ட அவர் அதனடிப்படையில் கட்சியில் சிறிய தவறுகளே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். 

அதேபோல் அமைச்சர் சஜித் பிரேமதாச 24 மணித்தியாலங்களில் 20 மணித்தியாலங்களும் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

´சஜித் பிரேமதாச அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்து எம்மை தொலைப்பேசியில் அழைப்பார். இது எமக்கு பாரிய தொந்தரவாகும். ஆனாப்படியால் நீங்கள் ஜனாதிபதியான பின்னரும் இவ்வாறு அழைப்பெடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் அவ்வாறு அழைத்தால் நான் மறுமொழி வழங்கமாட்டேன் என கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இரஞ்ஞனுக்கும் வேடிக்கைப் பேச்சுக்கள் ரொம்பப் பிடிக்கும் என்பதனை இந்த தலைப்பின் கடைசிப் பத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நன்றி அப்பனே நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.