Header Ads



சாய்ந்தமருது பள்ளிவாசலின் தீர்மானம், சகல முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும் - ஹக்கீம்


நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்த தீர்மானமானமானது பள்ளிவாசலின் ஒட்டுமொத்த தீர்மானமாக அமையாது என்பதை கலந்துரையாடலில் ஈடுபட்ட மரைக்காயர் சபை உறுப்பினர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். 

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது; 

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட்டது. அதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன்மூலம் கல்முனையில் ஏற்பட்ட சரிவை கட்சி தாங்கிக்கொள்ளும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை சாய்ந்தமருதுக்கு கூட்டிவந்து விரோத சக்திகளுக்கு துணைபோனமை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. 

சாய்ந்தமருது நகரசபை குறித்து ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு அவர்கள் தருவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். மாற்றுசக்திகள் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. நகரசபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி ஒருநாளும் பெறுமதியற்றுப்போக முடியாது. 

சாய்ந்தமருதில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்களையும் நாங்கள் புறந்தள்ள முடியாது. நாங்கள் பிரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக நாங்கள் ஒற்றுமைப்பட்டு அதிகாரங்களை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எங்களுக்கிடையிலான அதிகார ரீதியிலான சமன்பாட்டை சரிசெய்துகொள்ள முடியும். 

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எங்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினைக்காக, முழு சமூகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது எங்களை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடும். அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதே அரோக்கியமான விடயமாகும் என்றார். 

இச்சந்திப்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், எம்.எஸ். உதுமாலெப்பை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

4 comments:

  1. ஐயா இப்போதான் வாய் தொறந்திருக்கிறார். எலக்சன் இல்லையென்றால் மௌனியாகவே இருந்திருப்பார்.

    ReplyDelete
  2. இது பள்ளிவாசல் அல்ல.
    இறைவனை தொழும் இடத்தில் அரசியலுக்கு இடமில்லை.
    இது ஒரு அரசியல் விபச்சார விடுதி

    ReplyDelete
  3. These mosque officials are Brian washed by some bankrupt politicians ad they are supporting a family dynasty which every srilankan would regret later if the pottu man is elected.

    ReplyDelete
  4. இப்பிரச்சினை இவ்வளவு தூரம் சென்றதற்கு சாய்ந்தமருதினை தந்திரோபாயரீதியாக முஸ்லீம் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டுமென்ற திட்டமிட்ட முஸ்லீம் காங்கிரஸினுள்ளேயான சதியும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையின் பொடுபோக்குத்தனமும் காரணமாகும். அதேநேரம் இச்சந்தர்ப்பத்தினை மிகக்கச்சிதமாக, தலைவர் அஸ்ரப் காலமுதலிருந்தே முஸ்லீம் காங்கிரசுக்கெதிரான மனப்பான்மையிலூறிப்போன, முன்னாள் யூனியன் தலைவருக்கு அவரின் யூனியன் தலைவருக்குரிய அனுபவத்தினூடாக சாய்ந்தமருது வாக்குகளை விலைபேச முற்ட்பட்டிருக்கின்றார், முதலாவதாக பள்ளிவாயலுக்குரிய தலைவரென்பது எவ்வாறிருக்கவேண்டுமென எமது மார்க்கம் தெளிவாகக்கூறுகின்றது, இவர் அவ்வாறான தலைவரா? முஸ்லீம் சமூக பிளவினூடாக கிடைக்கும் எந்தத்தீர்வும் இஸ்லாமியனுக்குரிய தீர்வல்ல, இதற்குமுன் இப்பள்ளிவாயலுக்கு பல கௌரவமான தலைவர்களிருந்திருக்கின்றார்கள், இவருக்கு சாய்ந்தமருது மக்களின் வாக்குரிமையை விலைபேசுவதற்கு இம்மக்களொன்றும் கல்வியறிவில்லாத ஐயாமுல் ஜாஹிலியாக்கால அறிவிலிகளல்ல, சாய்ந்தமருதென்பது அம்பாறை மாவட்டத்திலேயே மித அதிக கற்ற மக்களைக்கொண்ட ஒரு பிரதேசமாகும், ஆகவே இம்மக்களைத்தெளிவுபடுத்தவேண்டியது சாய்ந்தமருதின் கற்ற மற்றும் சிந்திக்கும் மக்களையே சார்ந்ததாகும், ஹரீஸினைத் தோற்ற்கடிக்கவேண்டுமாயின் இத்தேர்தல் மூலம் அதனைசெய்யமுடியாது, மாறாக முஸ்லீம் காங்கிரசில் ஹரீஸைவிடத்தகுதியான சாய்ந்தமருதிக்கான ஒரு வேட்பாளரை பொதுத்தேர்தலில் முன்னிறுத்துங்கள், அதற்க்கான வாக்குறுதியினை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரிரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் அதன்மூலம் இவ்வூர் மக்களின் பிரச்சினையைத்தீர்க்கமுற்ட்படுங்கள், எமது சமூகத்தினை இறைவன் ஒற்றுமைப்படுத்தவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.