Header Ads



இலங்கையை வலுவான தேரவாத, பௌத்த நாடாக மாற்றப் போகிறேன் - ரணில்

இலங்கையை வலுவான பொருளாதாரம் கொண்ட தேரவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் மற்றும் மலாபே ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். இது நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமை.

நாங்கள் பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்காக அதிகளவான வேலைகளை செய்துள்ளோம். “புதுபுத் சுரக்ஷ” என்ற காப்புறுத் திட்டத்தின் மூலம் பௌத்த பிக்குகளுக்கு காப்புறுதிகளை வழங்க அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அறநெறி பாடசாலைகளை மேம்படுத்த அறநெறி பாடசாலை கட்டிடங்களை நிர்மாணித்தோம். பிக்குமாரின் இருப்பிடங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். விகாரைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. கௌரவ பிரதமர் அவர்களே அப்போ இவ்வளவு நாளும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.