Header Ads



அரசியலுக்கு வருகிறார், மைத்திரியின் மகள்...?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், சத்துரிக்கா செயற்பாட்டு அரசியலில் இறங்குவார் என்றும், சுதந்திரக்கட்சியில் மகளிர் பிரிவில் அவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்றதும். அடுத்த பொதுத்தேர்தலிலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாகவே நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்கு பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

மகளுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல், தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு மைத்திரி முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. சந்திரிகா சுதந்திரக்கட்சியைப் பொறுப்பெடுத்தால் இவளைக் கட்சியிலிருந்து துரட்சிபண்ணப்படவேண்டும். மைத்திரியும் குடும்ப அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார். மதுபானம், போதை வஸ்துக்களைத் தடை செய்யும் பெயரில் சதுரிகா மகளுக்கு மதுபான லைஸன்ஸ் கொடுத்து அவளுடைய பெயரில் மக்கள் சொத்துக்களைச் சூறையாடி கோடான கோடி பெறுமதியான ஹோட்டல்களை வாங்கி இந்த நாட்டில் குடும்ப ஆட்சியை நிறுவ ஆரம்பித்துவிட்டார். அதற்கான சகல அடிமட்ட பணிகளையும் பொலன்னருவையில் ஏற்கனவே செய்து களத்தை அமைத்துவிட்டார்.இந்த நாட்டுத்துரோகிகளை நாட்டில்வைக்காது நாடுகடத்த நல்லாட்சியைப் பொறுப்பேற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ரொம்ப அவசியம் - இனவாத அரசியலை இல்லாமல் செய்ய முடியாத
    ஊமை அரசியல்வாதியின் வாரிசு வந்து என்ன செய்யப்போகிறார்கள்
    தந்தை எவ்வழியோ தனையாளும்அவ்வழியே
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.