Header Ads



மைத்திரி பாராளுமன்ற உறுப்பினராவதற்கு, டிலான் பெரேரா ராஜினாமா செய்வாரா...?

பிரபலமான அரசியல்வாதி ஒருவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அரசியல் பிரபலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை பதவி விலகுமாறு கோரிய போது அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதுடன் அதற்கு பதிலாக ஊவா மாகாண ஆளுநர் பதவியை கோரியுள்ளார்.

ஊவா மாகாண ஆளுநராக தற்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன பதவி வகித்து வருகிறார். அவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் நோக்கிலேயே டிலான் பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. இந்த இரண்டு கழுதைகளும் ஓய்வூதியத்தின் சகல வசதிக ளையும் எடுத்துக் கொண்டு நாட்டு மக்களின் சொகுசு மாளிகையையும் எடுத்துக்ெகாண்டு அடுத்த கழுதையும் பாராளுமன்றத்துக்கு வரப்போகிறதாம். பதவிஆசையும் சொகுசு வாழ்க்கையும் இந்த சைத்தான்களை மரணம் வரை விட்டுவைப்பதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.