Header Ads



ஆசாத் சாலி, சஜித்திற்கு ஆதரவளிப்பது ஏன்...?

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை முன்னணி விரிவாக ஆலோசனை நடத்தியது.

கொலைகாரர்களையும் வெள்ளை வான் கலாச்சாரத்தைத் தொடங்கியவர்களையும் ஆதரிக்க முடியாது என்று நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்.

சிறுபான்மை சமூகங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறுகின்ற, பள்ளிவாசல்களில் வாள்கள் இருப்பதாகவும், மதரஸாக்கள் சோதனை செய்யப்படும் என்று கூறும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடியாது.

எனவே ஒருமனதாக, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்தோம். ஐதேக தலைவரை சந்தித்து எங்கள் செய்தியை தெரிவித்தோம்.

எங்கள் ஆதரவாளர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக செயற்படுவார்கள்.” என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. There i only one reason behind he pledged support, to lick some bones with flesh, and bark time to time, to raise communal tension among Sri Lankan societies and get benefited.

    nothing else he is there to achive

    ReplyDelete
  2. What difference does it make whom he supports? Has he got any vote bank?

    ReplyDelete

Powered by Blogger.