Header Ads



"அரசியலில் பட்டம் பெற்ற நான், வெற்றி பெற முடியாத தேர்தலில் போட்டியிடுவதற்கு முட்டாள் அல்ல"

ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட விரும்பாத போதும் காலத்தின் தேவையின் காரணமாக களத்தில் குறித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனச்சாட்சி உறுத்தலாக இருந்ததது. போட்டியிடாமல் விலகியிருக்க எண்ணினேன். இதிலிருந்து தப்பிப்பதற்காக நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தேன்.

எனினும் காலத்தின் தேவை தேர்தலில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குகளை உடைப்பது எனது நோக்கம் அல்ல.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் நான் போட்டியிடுவதாக எனது சமூகத்தை சேர்ந்தவர்களை என்னை தூற்றுகின்றார்கள்.

மட்டக்களப்பில் தமிழ் மக்களும் எனக்கு வாக்களிப்பார்கள். யுத்த காலத்திலிருந்து அவர்களை நானே பாதுகாத்து வருகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து கொடுத்துள்ளேன். இதன் காரணமாக மட்டகளப்பிலுள்ள அனைத்து மக்களும் எனக்கு விசுவாசமாக செயற்பாடுவார்கள்.

தனக்கு வாக்களிப்பதன் மூலம் தான் உருவாக்கும் ஜனாதிபதி ஊடாக தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களை பெற்றுக் கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸஸவை தோல்வி அடையச் செய்வதற்காக கோத்தபாயவினால் நான் களமிறக்கப்பட்டதாக பொய்யாக குற்றம் சுமத்தப்படுகிறது. எனக்கு வாக்களிக்கும் மக்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.

அரசியலில் பட்டம் பெற்ற நான் வெற்றி பெற முடியாத தேர்தலில் போட்டியிடுவதற்கு முட்டாள் அல்ல. காரணம் இன்றி குதிக்கவில்லை. என்னை யாரும் இயக்கவில்லை. எனது சொந்த நிதியிலேயே தேர்தல் செலவுகளை மேற்கொண்டு வருகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. Your great member of SLMC ASHRAFF
    PERIOD.ALL INFORMATION HAVE PASSING FROM SLMC TO CHANDRIKA.

    ReplyDelete
  2. ஐயா, அரசியலில் பட்டம் பெற்ற ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் ஒரு பெருமையும் இல்லை. உங்கள் பேச்சின் ஒவ்வொரு பந்தியிலும் பொய்யும், புரட்டும் தான் தொனிக்கின்றது. இவ்வாறான கலையில் நீங்கள் பட்டம் பெற்றிருக்கக் கூடும். வீண் விடுகதை விட்டு நேரத்தை வீணாக்கி சாபத்துக்கு ஆளாகாமல் தப்பிப் பிழைக்க வழியைப் பாருங்கள். வரலாற்றில் உங்கள் பெயர் ஏற்கனவே பதிவாகிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.