Header Ads



மங்களவை பிரதமராகவும், திஸ்ஸவை கட்சி செயலாளராகவும் நியமிக்க சஜித் அணி தீர்மானம் - ரோஹித்த

அடுத்த அரசாங்கத்தில் பிரதமராக அமைச்சர் மங்கள சமரவீரவை நியமிக்க சஜித் அணியினர் தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுவர்தன தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் இன்று -17- நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க தயாராகி வருகிறார். சஜித் பிரேமதாசவின் பிரசார அலுவலகம் மங்களவின் வீட்டில்.

ரணிலை தெற்கு அனுப்ப வேண்டாம் வடக்கு அனுப்புங்கள். வடக்கிற்கு அனுப்புங்கள் வடக்கில் வாக்குகள் இருக்கின்றன என தற்போது பேசப்படுகிறதாம். சஜித் அணியில் இருப்பவர்கள் ஜனாதிபதித் தேர்தல் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவிக்காக போராட்டம் நடத்துகின்றனர். தோல்வியடைவோம் என்று தெரிந்ததால், நவம்பர் 17 ஆம் திகதி கட்சியின் தலைவர் பதவியை பெற தற்போது தயாராகி வருகிறார்கள் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உம்மைவிட பிரதமராக பதவி வகிக்க மங்கள தகுதியானவர் போல் தெரிகிறது.

    ReplyDelete
  2. Do not worry about others. It is up-to them to decide PM, Minsters and secretary. You look after your party.

    ReplyDelete

Powered by Blogger.