Header Ads



முஸ்லிம்களின் வாக்குகள், கோத்தாபயவுக்கு முக்கியமானது - பசில்

இம்முறை எந்தவொரு அனைத்துலக சக்தியும் தலையீடு செய்ய முயற்சிக்காது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசியலில் அனைத்துலக  சமூகத்தின் வகிபாக மாற்றம் பற்றி ‘தி ஹிந்து’வுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், நெறிமுறைகளின்படி அப்படித் தான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2015 இல் மகிந்த ராஜபக்ச, ஆட்சியை இழந்த பின்னர், ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பே இருந்ததாக குற்றம்சாட்டி வந்தார்.

எனினும், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச “ தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ ஆதரவு அளித்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று கூறினார்.

‘ஆனால், என்ன தவறு என்று, இப்போது, நாங்கள் மிகவும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம்.

அவர்கள் முன்னர் எங்கள் அரசாங்கத்தை மாற்ற வேலை செய்திருந்தால், நாங்கள் இப்போது நிலைமையை சரி செய்துள்ளோம்.

இந்தியா எங்கள் முதலாவது நண்பன் மற்றும் அண்டை நாடு. எனவே அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் நாம் எப்போதும் இந்தியாவுடன் செல்ல வேண்டும்

ஆனால், பொருளாதார மற்றும் பிற விடயங்களில் நீங்கள் சீனாவை மறந்து விட முடியாது.

15.99 மில்லியன் வாக்காளர்களில், 80 வீதமானோர் வாக்களித்தார், சுமார் 12 மில்லியன் செல்லுபடியான வாக்குகள் இருக்கும். அதில், 6.5 மில்லியன் வாக்குகளை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்.

இது இலகுவானதல்ல என்பது எமக்குத் தெரியும். உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் போதுமானதல்ல. இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியமானது.

கோத்தாபய ராஜபக்சவுக்கு தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் முக்கியமானவை.

தமிழர்கள் என்ன நடந்தது என்பதை மறக்க முடியாது தான், ஆனால் இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வு ஒன்று காணப்படும். புதிய அரசியலமைப்பு தேவையா என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

எங்கள் வேட்பாளர் யார், அதிபர் யார் என்பது முக்கியமல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜபக்ச] அவரே, அரசாங்கத்தின் தலைவராக [பிரதமராக] இருப்பார்.

4 comments:

  1. இப்போ முஸ்லிம்களின் வாக்குகள் தேவை, அடி பின்னர் தேவை

    ReplyDelete
  2. இனவாத அரசியல் பயணத்தின் அடிக்கல் உங்களிடமே இருக்கிறது
    அடாவடி மதகுருக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்வசம் வைத்துக்கொண்டு - தங்கணம் கட்டித்திரியும் கூட்டமல்லவா நீங்கள் எப்படியடா மறக்க முடியும் - இம்முறை தமிழ் முஸ்லீம் பலம் என்னவென்பதை உமக்கு உணர்த்துவார் - மர்சூக் மன்சூர் தோப்பூர்

    ReplyDelete
  3. இனவாத அரசியல் பயணத்தின் அடிக்கல் உங்களிடமே இருக்கிறது
    அடாவடி மதகுருக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்வசம் வைத்துக்கொண்டு - தங்கணம் கட்டித்திரியும் கூட்டமல்லவா நீங்கள் எப்படியடா மறக்க முடியும் - இம்முறை தமிழ் முஸ்லீம் பலம் என்னவென்பதை உமக்கு உணர்த்துவார் - மர்சூக் மன்சூர் தோப்பூர்

    ReplyDelete
  4. புலிப் பயங்கரவாதத்திலிருந்து மக்களை விடுவித்து பௌத்த பயங்கரவாதத்தை எம்மீது சாட்டியவர்கள் நீங்கள். எங்களை கொஞ்சம் நிம்மதியாக வாழ விடுங்களேன்.

    ReplyDelete

Powered by Blogger.