October 13, 2019

யார் இந்த உமர்...? பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர்.

மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். 

சரியான ஒரு வீடு இல்லை அவர்களுக்கு

முன்பு புகையிலை காய்ச்சிய ஒரு இடத்தில்தான்
உமர் குடும்பத்தினர் இன்றும் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்யும் ஒரு தந்தை. 

நான்கைந்து பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு
வளர்த்து வருகின்றார்.

உமரின் தாய் தந்தையும் பெரிதாக படித்தவர்கள்
இல்லை.

அவர்களுக்கு மூன்று வேலை உணவு கொடுத்து 
பிள்ளைகளை பராமரிப்பதே பெறும் போராட்டம்.

உமர் சரியாக பாடசாலை செல்வதுமில்லை,
மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதுமில்லை,
வீட்டுக்கு ஆசிரியர்களை அழைத்து கற்கும் 
அளவுக்கு வசதியுமில்லை.

ஆனால் உமர் கெட்டிக்காரன்.

உமரிடம் இருக்கும் ஒரு பிறவித்திறமையை மிகச் சரியாக அவனது வகுப்பாசிரியர்கள் இணங்கன்டு
அவனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்

ஆம்  வெளியாகிய -2019- புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று 
உமர் சித்தியடைந்து இருக்கிறான். 

பெற்றோரின் பரீட்சை என்று சொல்லப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் எந்த பெரிய பின்னனியும் இல்லாமல், இருப்பதற்கு ஒரு வீடோ,
படிப்பதற்கு ஒரு அறையோ இல்லாமல் ஒரு மாணவன் சித்தியடைந்து இருக்கிறான். 

கல்வி கற்பதற்கு எதுவும் தடை இல்லை என்பதை
உமர் நிரூபித்து இருக்கிறான். 

உமரின் தாய்க்கு தனது மகன் ஒரு தேசிய மட்ட பரீட்சையில் சித்தியடைந்து இருக்கிறான் 
என்பதை புரியவைக்கவே நீண்ட நேரம் எடுத்தது
எனக்கு.

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் வந்து குவியத் தொடங்கிய பிறகே அந்த தாய் தனது மகன் ஒரு குறிப்பிடத்தக்க அடைவை அடைந்து இருக்கிறான் என்பதை உணர்கிறாள்.

காலை முதல் இரவு வரை டியுஷன், செமினார் என்று தாயும் மகனும் கஷ்டப்பட்டாலும் சித்தியடைய முடியாமல் போகும் இந்தப் புலமைப் பரிசில் பரீட்சையில்,

இந்தப் பரீட்சை குறித்தே ஒரு போதிய தெளிவில்லாத ஒரு பெற்றோரின் மகன் சித்தியடைந்து இருக்கிறான்.

" நீங்கள் கொண்டுவந்து தந்த Bag கைத்தான்
எங்கள் மகன் இன்றும் பாடசாலைக்கு கொண்டு செல்கின்றான்" என்றார் உமரின் தாய்.

உமருக்குத் தேவையான சகல கற்றல் உபகரணங்களையும் கடந்த இரண்டு வருடங்களாக நாம் வழங்கி வருகின்றோம்.

அதற்கு உதவிய எமது செயற்திட்டங்களுக்கு
எப்போதும் உதவும் ஜப்பானில் இருக்கும் அக்குரனை நண்பரையும் நன்றியுடன் ஞாபகமூட்டுகின்றேன்.

உமரின் வெற்றிக்கு மிகச் சிறிய ஒரு பங்களிப்பையேனும் நாமும் செய்திருக்கிறோம்
என்பதில் ஒரு திருப்தியிருந்தாலும்,

கற்றல் உபகரணங்களையும தாண்டி உமருக்கு
ஏதாவது பெரிதாக நாம் உதவி புரிந்திருக்கலாம்
என்று இப்போது நினைக்கிறது.

சரியான வழிகாட்டல்கள், உதவிகள் கிடைத்தால்
உமர் போன்றவர்கள் தேசிய ரீதியில் கூட முதலிடம் பெற்றிருப்பார்கள். 

இப்படி நிறைய உமர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.

-Safwan Basheer-

7 கருத்துரைகள்:

அந்த உமருக்கும்,அவனின் குடும்பத்துக்கும் முதலில் வீட்டு வசதியை செய்து கொடுக்க வேண்டும்.உமரின் தந்தை சரியான ஒரு சிறிய வியாபாரத்தை நடத்த அல்லது விவசாயம்,கால் நடை வளர்க்க தேவையான நிதியை திரட்டுவோம் Basheer சகோதரா இந்த வலைத்தளத்தில் அவர்களுக்கு நிதி அனுப்ப கூடியவாறு ஒரு வங்கி இலக்கத்தை பதிவிடுங்கல்.இது போல் பல ஆயிரம் உமர்கலும், சக தமிழ்,சிங்கள,கிருத்தவ சிறு பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் திறமை இருந்தும் பெற்றோரின் வறுமையால் பாதிக்கப்படுகின்ரனர்.கல்வி எனும் சுதந்திரத்தை இழக்கின்ரனர்.எனவே அரசியல் வாதிகலே,தன வந்தர்கலே இப்படியான பிள்ளைகள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களை தேடி தேடி உதவுங்கள்.

What is this student's school

I appreciate Rizard's comment. There is no discrimination between students and needy people whoever they may be. Whatever I can help him as per your instructions. Please direct me. my email Id: slcdfs3@yahoo.com.

Post a Comment