Header Ads



சஜித் வேட்புமனு தாக்கல் செய்கையில், ரணில் செல்லாதது ஏன்...?

சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் அத்துரலியே ரத்ன தேரரும், முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் ஹிஸ்புல்லாவும் ஒரே நோக்கத்தின் கீழ் வெளிவேறாகச் செயற்படுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -08- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அத்துரலியே ரத்ன தேரர் கோதாபயவிற்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

இதே போன்று முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்வதற்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா செயற்படுகின்றார். இவர்கள் இருவரும் ஒற்றுமையற்றவர்கள் போன்று வெளியில் காணபித்தாலும் கொள்ளை அடிப்படையில் ஒன்றாகவே செயற்படுகின்றனர்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்;ட தினத்தன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தரவில்லை என்பதால் , சஜித்துக்கு அவர்களுடைய ஆதரவு இல்லை என்று பொதுஜன பெரமுன கூறுகின்றது. அமைச்சர் சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவது புதிய ஜனநாயக கூட்டணியிலாகும். இதன் செயலாளரான சாமிலா பெரேரா சஜித்துடன் ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார். இதனை பொதுஜன பெரமுன தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தை காண்பித்து போதைப் பொருள் விற்பனையாளர்களும், கொலைகாரர்களும் வெற்றி பெற்றுவிட்டனர். அப்போது மக்கள் மஹிந்தவினுடைய முகத்திற்காக வாக்களித்தனர். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவ்வாறு கவனயீனமாக முடிவெடுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.