Header Ads



"ஞானசாரரும், திஸாநாயக்கவும் பேசக் கூடாது"

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு இந்துக்கோவில் ஒன்று இருக்கவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுடைய கருத்துக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இந்துக்கோவில் ஒன்று இருக்கவில்லை என்றும் ஆரம்பத்திலிருந்தே அது பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டது என்றும் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் கூறியிருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

(நா.தனுஜா)

4 comments:

  1. Dear MP சார், நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம்.

    ஆனால், இனவாதிகளுக்கு எதிராக தனியாக போராடிவரும் கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் இதே பிக்குகள் தான், உங்கள் TNA அல்ல. அந்த உதவிக்காக வடக்கு இந்து மக்கள் இந்த தடவை இந்த பிக்குவை மன்னிப்பது தான் சரி

    ReplyDelete
  2. ஒரே ஒரு கோவில் சம்பவத்திற்காக இவ்வளவு எதிர்ப்பு செய்கிறார்கள்.

    ஆனால் கடந்த சில வருடங்களாக நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருகின்றது, இந்த முஸ்லிம்கள் எப்படி கோழைகளாக வாழ்கிறார்களோ தெரியவில்லை

    ReplyDelete
  3. @Mr.Ajan, Pls mind your own BUSINESS.

    ReplyDelete
  4. அஜன் முஸ்லிம்கள் உசுப்பேரமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்.

    ReplyDelete

Powered by Blogger.