Header Ads



முஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளிப்படுத்திய இங்கிலாந்து திருச்சபையின் பாதிரியார் ஜீ.எஸ்.கே. ஃப்ரான்ஸிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை காவல்துறையினரால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறித்த தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இஸ்லாம் அடிப்படைவாத குழு ஒன்றினால், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் நிந்தவூர் முஸ்லிம் மக்களிடமிருந்து தங்களுக்கு இரகசிய தகவல் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்திக்க நடவடிக்கை எடுத்ததுடன், இதன்போது ஒரு அதிகாரியிடம் குறித்த தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி கூறினார்.

 இதையடுத்து, குறித்த அதிகாரி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த சந்தர்ப்பத்தில், பிரதமர், காவல்துறைமா அதிபர் உட்பட மேலும் சில அதிகாரிகளுக்கு கூறினார்.

இந்த தகவல் கிடைத்த பின்னர், இராணுவத் தளபதி, காவல்துறைமா அதிபர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் உடனடியாக ஏதாவது நடவடிக்கையை மேற்கொள்வார்கள் எனத் தாம் எதிர்பார்த்தபோதும், எனினும், அவ்வாறு இடம்பெறாமை தங்களுக்கு வேதனையளிப்பதாக பாதிரியார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த உடக சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர், கோட்டை காவல்துறையினர் குறித்த பாதிரியாரை கைதுசெய்துள்ளனர்.

கல்கிஸையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை அனுமதித்தமை தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதிரியார் ஜீ.எஸ்.கே. ஃப்ரான்ஸிஸ் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து, 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.