Header Ads



சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி, மைத்திரி ஆதரவு வழங்குவார் - மங்கள

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்குவார் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் ஸ்தாபரான பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு அமைய செயற்படும் ஒருவராக சஜித் பிரேமதாஸ உள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உண்மையாக நேசிக்கும் அனைத்து உறுப்பினர்களும் சஜித்திற்கே ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க போன்றோர் எதிர்வரும் நாட்களில் அரசியல் அநாதைகளாக்கப்படுவர் என அவர் ஆருடம் வெளியிட்டுள்ளார்.

மாத்தறையில் தனது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மங்கள இதனை மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.