Header Ads



பக்தாத்தியின் உடலை ஆழ்கடலில், வீசியதாக பென்டகன் அறிவிப்பு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (48) அமெரிக்காவினால் நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பதுங்கி இருப்பதை குர்துக்கள் அளித்த இரகசிய தகவல் மூலம் அமெரிக்கா அறிந்தது. பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

அமெரிக்காவின் கையில் சிக்கித்தவிப்பதை விட தன்னைத்தானே பலியிடுவது மேல் என முடிவு செய்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பாக்தாதி வெடிக்கச்செய்தார்.

இதில் பாக்தாதியும் அவருடன் இருந்த 3 குழந்தைகளும் பலியாகினர். இத்தகவலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

இதன்போது, பாக்தாதியின் உடலுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அவரது உடல் ஆழ்கடலில் எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டு விட்டதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

முன்னதாக, அல் கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலும் ஆழ்கடலில் வீசப்பட்டது.

பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் உடல்களை புதைக்காமல் கடலில் வீசுவதையே அமெரிக்கா வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. well done America and please get rid of all radical groups

    ReplyDelete
  2. They created all these groups... Once they do whatever their hidden projects... The Neocons will get rid of them... Amazing thing even this imposter's body also thrown in the sea... Same Bin Laden...!!!
    Something to ponder... Open eyes Bro...

    ReplyDelete
  3. ட்ரம்பு பெருமை அடிக்கிரான், ஒஸாமாவை கொன்றேன், மகன் Hஅம்ஸாவை கொன்றேன், பின்பு பக்தாதியை கொன்றேன், இதற்கு முதல் சத்தாம், கடாபி போன்று ஏறாளமானோரை ஒளித்தோம்.
    அப்பாபிகளை பிடித்து நாய்களால் இழூத்துச் சென்று கொலை செய்யும் காட்சியை பார்க்க வில்லையா. சத்தாமை வீழ்தியது தான் இத்தனைக்கும் காரணம். வரலாற்று புகழ் மிக்க ஈராக்கும் சிரியாவு மகளோடு சேர்ந்து அழிந்த்து விட்டது. கவலை இல்லாமல் ட்ரம்புடனும் அவனுடைய நன்பர்களுடன் சேர்ந்து சந்தோசப்படாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.