Header Ads



இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தலைவரின் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் காலமானார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72) இன்று (30-10-2019) புதன்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (31-10-2019) வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹுசைனி ஜூம்மா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு  94434 45697, 94435 29734

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்,  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் அதன் தலைவர் என்.எம். அமீன் இதுதொடர்பில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்

    ReplyDelete

Powered by Blogger.