Header Ads



கோதபாயவின் வெற்றியினை சிங்களவர்கள் தீர்மானித்து விட்டனர், நமது வாக்குகள் போனஸ் ஆகும் - அதாவுல்லாஹ்

கடந்த நான்கரை வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையை இழந்த இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட கறல் படிந்த கசப்பு வரலாற்றை என்றும் எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.

இவ்வாறு சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபகஷவை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் பெரும் திரளான சன சமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

எமது நாட்டையும் , நம்மையும் காப்பாற்றி , வடக்கிலிருந்து கிழக்கை தனியாக பிரித்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி, எமது நாட்டை ஒரு முதுகெலும்புள்ள இராஜ்சியமாக மாற்றி எமக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழியமைத்த பெரும் தலைவன் மஹிந்த ராஜபக்ஷவை  கிழக்கு மண்ணும் மக்களும் என்றும் மறந்து விடக்கூடாது.

தமது உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து தமது வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் மீனவர்கள் மட்டுமல்ல , பள்ளிகளிலே நிம்மதியாக தொழ முடியாத , கோயில்களில் புசாரிகள் தமது கடமைகளை சரியாக செய்ய முடியாத , பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகள் போக முடியாத , மீன் சந்தைக்கு போனால் குண்டு வெடிக்கும் என்ற நிலைமையை மாற்றி புலிப்பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மை நிம்மதியாக வாழ வைத்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை ஒரு கணம் நினைத்து பாருங்கள்.

வாழ்வதற்கு எவரேனும் சுவாசக்காற்றை கொடுக்க மாட்டானா  இந்த விடுதலையோடு எம் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் உருவாக்கிய ஸ்தாபனத்தினூடாக முஸ்லீம்களுக்கு எதையாவது செய்யலாம் என்றிருந்த நாம் இன்று அந்த இயக்கத்துடன் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கி கொடிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து தாருங்கள் , வடக்கிலிலிருந்து கிழக்கை பிரித்து தாருங்கள் , இலங்கையில் வாழும் எல்லா இனத்தவர்களுக்கிடையிலும் ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் பொதுவான திட்டமொன்றை வகுத்து தாருங்கள் என்ற மூன்று விடயங்களை அவரிடம் நாம் முன் வைத்தோம்.

முதல் இரண்டு விடயங்களையும் முடித்து மூன்றாவது விடயத்தை முடிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீமும் , இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாத் பதியுதீனும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்ததும் இனக்கலவரங்கள் வெடித்து முஸ்லீம்களை இந்த தலைவனிடமிருந்து  பிரித்து இந்த நாட்டை சின்னா பின்னமாக்குவதற்காக 2013 ஆம் ஆண்டு நாம் பாவிக்கப்பட்டோம்.

ஹக்கீம் மற்றும் றிஸாத் ஆகியோர் நாடகமாடி குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றி நம்மையெல்லாம் நாட்டுப்பற்று அற்றவர்களாக மாற்றி மஹிந்த ராஜபகஷவுக்கு நன்றிக்கடனற்றவர்களாக காட்டி எம்மையெல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் எதிரிகளாக பார்க்கப்படுபவர்களாக காட்டினார்கள்.

எனவே தொடர்ந்தும் கிழக்கு மக்கள் தவறுகளை செய்யாமல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபகஷ இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதனை இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் ஏற்கனவே முடிவெடுத்து விட்ட இந்த நிலையில் நாம் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் போனஸ் வாக்குகளாகும். எனத் தெரிவித்தார்.

( எம்.ஏ.ஏ.அக்தார்)

5 comments:

  1. அவர்கள் ஏற்கனவே தீர்மானித்தால் - அப்போ நீ எதுக்கு இனவாதிகளோடு ஓட்டிட்டு இருக்கிறாய்- முஸ்லிம்களின் வாக்குகள் கோத்தபாயாவுக்கு தேவைல்லை என்று வெட்கமில்லாமல் இப்படி பொறுப்பு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறாயே
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete
  2. Mahinda is not a President candidate where is Gota. If Sinhala people has decided to vote for Gota then he needs above 70% but this is not possible.
    In the last President election in 2015 Mahinda got maximum in Hambantota (63%) and Monaragala (61%). These two districts are about 95% of the sinhala population but Mahinda lost.
    In other districts where mahinda won, he got below 55% except In Matara 58%.
    So in this election in Sinhala majority areas if he gets below 60% mean , Gota will loose.

    ReplyDelete
  3. Former minister is miscalculating ...like last time.he should come out of static strategy to a dynamic evolving ground situation.probably he also is moving forward to family dynasty in APT ...same as raja horu family..

    ReplyDelete
  4. Athaullah, Ratna Thera, Wijedasa Rajapaksa, Gnanasara Thera, Wimal Weerawansa, Gammanpila, Mubarak Moulavi, and GMOA, All racists are in one group.

    ReplyDelete
  5. Bro Manzoor,

    all modern communal riots against minority communities specially against Muslims were master planned and executed by none other than Mr.Champika Ranawaka,

    Did you read his books written on Jihad and redical Islam. He is with Tamil diaspora, funding,planning and executing with well drafted agenda.

    He will support a weak candidate, as you can see Mr.Maithripala in 2015, who was blind when his own country society was discriminated, sidelined and prosecuted on top of conspiracy theories against Muslims.

    Now he is supporting Mr.Sajith, who is another hypocrite, and dance as per Mr.Champika's strategy, and already he declared openly that he will implement his strategies.

    Mr.Champika's plan is to build on these opportunities and become president of Sri Lanka in year 2025.

    simaple example - can you segregate garbage as Muslim/ Sinhala/Tamil garbage.. It is the concept of Mr.Champika

    See what happen to Mr.Sirisensa, he is in situation, he cant even become a member of parliament.

    Thick wisely and cast your votes.

    ReplyDelete

Powered by Blogger.