Header Ads



என்னோடு போட்டியிட்டு கோத்தாபய, தோல்வியடைய வேண்டும் - இதுவே என் விருப்பம்

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான மனு மீதான விசாரணையின்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் நான் எதனையும் கூற விரும்பவில்லை. ஆனால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் என்னுடன் போட்டியிட்டே தோற்க வேண்டும், இதுவே எனது விருப்பம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் குழாமால் நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கோத்தபாய எனக்குச் சவால் அல்ல. இதனை நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதேவேளை, நானும் தனக்குச் சவால் அல்ல என்று கோத்தபாயவும் பல தடவைகள் தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்களின் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன. பெரும்பாலான மக்கள் கோத்தபாயவைத் தோற்கடிக்கத் தயாராகவுள்ளனர். எனவே, அவரின் தோல்வி உறுதி என்றே நான் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அப்பா ஏன் சும்மா பொய் வழக்குகளை போட்டு நோண்டி ஆகுறீர்கள்

    ReplyDelete
  2. inthak kaelviya aen ivaruttak kaekkureer???

    ReplyDelete

Powered by Blogger.