Header Ads



யாழ் விமான நிலையம், பகலில் மட்டுமே இயங்கும் - வியாழன் தறையிறங்குகிறது முதலாவது விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துலக தரத்திற்கு இணங்க, அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கும் என்று சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரி ஒருவர்,

”ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையம் பகல் நேரத்தில் மாத்திரம் இயங்கும்.

விமான ஓடுபாதை சமிக்ஞை விளக்குப் பொறிமுறைகள் பொருத்தப்பட்டதும், நாள் முழுவதும் செயற்படக் கூடியதாக இருக்கும்.

அனைத்து எல்லை கட்டுப்பாட்டு முறைகளும் வழக்கம்போல செயற்படுத்தப்படும்.

அத்துடன், சுங்கத் தீர்வையற்ற வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

2

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வியாழக்கிழமை,  யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.

இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது.

இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வில்சிறிலங்கா அதிபரும், பிரதமரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

4 comments:

  1. வாழ்த்துக்கள் எம் தேசத்தின் மற்றுமொரு முன்னேற்றம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் எம் தேசத்தின் மற்றுமொரு முன்னேற்றம்

    ReplyDelete
  3. This will enable Jaffna people to to save 8-10 hours on the road, now they can transit via India or Katunayaka.

    ReplyDelete

Powered by Blogger.