Header Ads



"இறைவா... குழந்தை சுஜித்தை விஞ்ஞானத்தால் அல்ல, உன் வல்லமையால் காப்பாற்று"


இறைவா... உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்...
36 அடியிலிருந்த சுஜித்தை
100 அடிக்கும் கீழாக தள்ளிவிட்டதுதான்
நம் தொழில் நுட்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக
ஆழத்தில் தள்ளி
சாதனை செய்துவிட்டது
சாதனம்....
சுஜீத்தை காப்பாற்றி
நம் வயிற்றில் பால் வார்ப்பார்கள்
என்று பார்த்தால் ...
சுஜித்தின் தலையில் மண் விழுந்திருக்கிறது என்கிறார்கள்.
நாம் பெருமை கொள்ளும்
உயிர்காக்கும் கண்டுபிடிப்புகள் எல்லாம் உயிர் எடுக்கவே
பயன்படும் போல...
கண்ணுக்குத் தெரியாத செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பத் தெரிந்த தொழில் நுட்பத்திற்கு...
கண் முன்னே ஆழ்குழாயில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற தெரியவில்லை...
செய்திச் சேனல்களுக்கு
தீபாவளி விளம்பரத்தோடு
சுர்ஜித்தும் விளம்பர பொருளாகி விட்டான்...
விவாதம் நடத்த அவர்களுக்கு விஷயம் கிடைத்து விட்ட சந்தோஷம் ...
"ரிக் இயந்திரம் குழந்தையை காப்பாற்றி விடும்" ... என்று சொல்வதை விட
அது எட்டு கோடி என்று சொல்லும் சப்தம்தான் பெரிதாய் கேட்கிறது இங்கே...
என் தேச தலைவர்களால்
எலுமிச்சை பழம் வைக்க
ஏரோப்பிளைன் வாங்க மட்டுமே தெரியும்...
ஆனால்
இந்தச் சூழலிலும் கண்ணீரோடு குழந்தைக்கு பை தைத்துக் கொடுக்கும் தாய்க்கு மட்டும்தானே தெரியும் கர்ப்பப் பையில் சுமந்த வலி என்னவென்று ...
ஒன்பது மாதம்
காற்று கூட புகமுடியா
இருட்டறையில்...
தாயின் கருவறையில்
குழந்தையை பாதுகாக்கும்
இறைவா !
குழிக்குள் விழுந்து இரண்டு
நாளான இந்தக் குழந்தையையும்
உன்னைத் தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்..?
இறைவா....
குழந்தை சுஜித்தை
விஞ்ஞானத்தால் அல்ல...
உன் வல்லமையால் காப்பாற்று....

*செய்யது அஹமது அலி . பாகவி*

3 comments:

  1. நெஞ்ஞம் பதரிவிட்டது.இப்படி ஒர் கவனயீனமான பெற்றோரை நினைக்கும் போது கவலையாக உள்ளது.அந்த குழந்தையை நிலையை நினைக்கும் போது இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை

    ReplyDelete
  2. யா அல்லாஹ்வே நீ வல்லமைகொண்டவன் - மூடப்பட்ட குழிக்குள் மூடப்படாத பகுதியை அறியாத பெற்றோரும் குழந்தையும் என்ன செய்வார்கள் ரப்பே
    யாவற்றையும் நீ நன்கறிந்தவன்- உண்ணலையேன்றி வேறு யாராலும் சிறுவன் சுர்ஜித் ஐ பாதுகாக்க முடியாது ரப்பே - அந்த குழந்தையை பாதுகாத்து நீண்ட சுக வாழ்வினையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக ரப்பே
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்-07

    ReplyDelete
  3. மீண்டு வா தங்கமே உனக்காக இந்த தாயும் அழுகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.