October 18, 2019

தோற்கடிக்கப்பட வேண்டிய, சம்பிக்கவின் இனவாத இலக்கு...?

இலங்கையில் இனவாத ஊக்குவிப்பாளர்களில் முக்கியமானவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க பற்றிய பதிவே இதுவாகும் 

#அறிமுகம் 

இலங்கையில் காலத்திற்கு காலம் இனவாதிகளின் செயற்பாடுகள் இருந்து வந்துள்ளன, அது சிறுபான்மைச் சமூகங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது, அதில் "அரசியல் இனவாதிகள்" இருப்பினும் , இன்னும் சிலர் புத்திஜீவித்துவமான முறையில் இனவாதத்தை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் மிக முக்கியமான ஒருவரைப் பற்றிய பதிவே இதுவாகும். 

#யார்_இந்த_சம்பிக்க..

சம்பிக்க ரணவக்க ஹொரண புளத் சிங்கள பிரதேசத்தில் சேர்ந்த, மொறட்டுவ பல்கலைக்கழக Electrical  பொறியியலாளர். 
ஆரம்ப காலங்களில் JVP யின் முன்னணி உறுப்பினராகவும், பின்னர் Jathika Mithururayo என்ற அமைப்பை உருவாக்கியவர்.,பின்னர் அடிப்படைவாத அமைப்பான சிஹல உறுமய அமைப்பின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர். பாராளுமன்ற உறுப்பினர்,

#இனவாத_சிறப்புத்_தன்மை 

அரசியலில் விமல், கம்மன்பில ரத்தன ஹிமி, போன்ற பலர் காலத்திற்கு காலம் இனவாத அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தாலும், அதனை பின்னர் மறந்து விடுவர், ஆனால் சம்பிக்க அவ்வாறு அல்ல  சிறுபான்மைக்கு எதிரான  ,இனவாதத்தை ஒரு  "அறிவியலாக"இலங்கைச்  சமூகத்தில் முன்வைக்கின்ற மிக நுட்பமானவர், மட.டுமல்ல, மேற்கூறிய சிறிய இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்கியவர் இவரே, ஏனையவர்கள் இவரது வளர்ப்பு குட்டிகளே

#எதிர்கால_இலக்கும்_செயற்பாடும்

சம்பிக்கவின் இலக்கு இலங்கையின் ஜனாதிபதியாக வருவது, அதற்கான தனது செயற்பாட்டை ஆரம்பித்து மிக வெற்றிகரமாகப் பயணிக்கின்றார் ,அதற்கான மிக பொருத்தமான அரசியல் வழிமுறைகளை தெரிவு செய்கின்றார், அவரது  வழி முறையே  பலவீனமானவர்களை நாட்டுத் தலைவர்களாக்கி, தன்னை பலப்படுத்துவது இதனை அவர் மைத்திரி அரசில் சிறப்பாகச் செய்தார், இப்போது சஜித் தை ஆதரிக்கின்றார். 

சஜித் போன்றவர்களின் பலவீனத்தை இவர் தனக்கான பலமாக்க நினைக்கின்றார்,

#அரசியல்_பலப்படுத்தல், 

பலவீனமானவர்களின் அரசில் தன்னைப் பலப்படுத்தும் நகர்வை மஹிந்த தரப்பில் மேற் கொள்ள முடியாத காரணத்தால் சஜித் அரசில் அதனை நிறை வேற்றுகின்றார், சஜித் வென்றால் அவரே  பிரதமர் என்று  கருத்துக்களும் உள்ளன, அந்த இலக்கில் அவரது பயணம், 2025ல் நாட்டுத் தலைவராகும் இலக்கை நோக்கி வெற்றி கரமாக  நகர்கின்றது,  UNP யின் வாடகை வேட்பாளர் அனுபவம் அவற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் வழங்கலாம்..  அதே போல் சஜித்தை வேட்பாளராக்குவதில் இவரது பங்கும் அதிகமானதாகும்.

#முஸ்லிம்_அச்சுறுத்தல் 

சம்பிக்க அரசியல்வாதி மட்டுமல்ல சிங்கள சமூகத்தின்  புத்தி ஜீவியாகவும் தன்னை அடையாளப்படுத்துபவர், அவரால் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன அவற்றில் பல சிறுபான்மைத் தாக்குதலாக அமைந்தாலும் இரண்டு புத்தகங்கள் முஸ்லிம்களை நேரடியாகத் தாக்குகின்றன . அதில் 

1). "கிழக்கில் சிங்கள மரபுரிமைகள், 

2).அல் ஜிஹாத், அல் ஹாயுதா, 

இவை இலங்கை முஸ்லிம்களை நேரடியாகவே பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந் நாட்டிற்கான அச்சுறுத்தல் என கூறுகின்றன, முதல் நூல் கிழக்கில் முஸ்லிம்களை  இடமற்றவர்களாக்கி, அவர்களின் இருப்பின் வேர்களையே தொல்லியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குகின்றது, 

#கவலையான_நிலமை, 

சம்பிக்கவின்  இனவாத அரசியல் பயணத்தை தடுக்கக் கூடிய பலமற்றவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர்,  இதனை  புத்தளத்து குப்பை விவகாரத்தில் கண்டோம், மட்டுமல்ல அவரது புத்தகத்திற்கான பதில்கூட இன்னும் எவராலும் எழுதப்படவில்லை, அத்தோடு அவரது நூல்களே எதிர்கால இளம் இனவாதிகளுக்கான " #மகா_வாக்கியமாகவும்  அமையப் போவதுடன், இளம் சிங்கள இளைஞர்களை முலிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடத் தூண்டும் வழிகாட்டியாகவும் உள்ளது,

#என்ன_செய்யலாம்?? 

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வென்றால் பலம் பெறப் போவது சம்பிக்கவே தவிர வேறு யாரும் இல்லை, அதனை சஜித் பல இடங்களில் உறுதிப்படுத்தியும் வருகின்றார், எனவேதான் நவம்பர் 16 ல் நாம் வழங்கப் போகும் வாக்கு, சஜித்துக்கு அல்ல சம்பிக்கவுக்கே பால் வார்க்கப் போகின்றது, குறிப்பாக கிழக்கு  முஸ்லிம் நில  இருப்பில் தொல் பொருளியல் என்ற உருவத்தில்  பலமான அழிவை உண்டு பண்ணும்.. 

எனவேதான் எதிர்வரும் தேர்தலை #சம்பிக்கவைத்_தோற்கடிக்கும்_தேர்தலாகப் பாவிப்போம், ஒரு இனவாதியின் எதிர்கால இலக்கில் இடி விழுவதாக எம் வாக்குகள் அமையட்டும்.... சஜித் வெற்றி பெற்றால் அவரை வழிப்படுத்தப் போகும் சக்கியாக இருக்கப் போகும் ஒரே பலமான  சக்தி சம்பிக்கவே,

எனவேதான்  தோற்கப் போவது சஜித் மட்டுமல்ல அது சம்பிக்கவாகவும் அமையட்டும்...

முபிஸால் அபூபக்கர்.

பேராதனைப் பல்கலைக்கழகம் 

18:10:2019

14 கருத்துரைகள்:

true
இனவாத்திற்கு சம்பிக்க என்றால்
மதவாத்திற்கு ஞானசேர பிக்கு + அணைத்து முஸ்லிம் கட்சிகள்

fool.you in Gota's pocket, for single Champika we will not vote him..

This idiot mufisal some time dream on bed...!!!! Cz... Contract...

you are right, it is true that you said about Champika, but in other hand Modi is behind Kothapaya & mahinda with other anti-muslim extremists.
so, currently choice is to empower Anura to be shared power to neutralize the bad situation when it come against minorities, particularly Muslims. But Allah is the one we need to seek the help who can change the mind of every human being and the situation within a short-while! Let's pray Allah for the safety of Muslims and peace of Sri Lanka.

To our unknown Idiotic Brother and everyone : Beware of this vicious serpent in white attire.. That is none other than : Pathola chimpaka Bayaanaka sorry Renawaka...

This is an eye opener for all the Muslims of Sri Lanka..
Thanks a lot Brother Abubacker

Champika ranil group.not sajith group.after sajith become president champika will go out ftom unp.

சம்பிக மிகப்பெரும் இனவாதி என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் இனவாதிகள் கோத்தாவின் கட்சியிலும் நிறையவே இருக்கின்றார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? முஸ்லிம் கட்சிகள் அதிகரிப்பதனால் முஸ்லிம்களுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகள் இழந்தவர்களாக பல மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். அமைச்சர்களாக இருந்தால் பதவிகளை துறந்து ஏனும் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். எந்தப் பதவிகலும் இல்லாமல் சாதாரண எம்பிகளாக மாத்திரம் இருந்து எதையும் சாதிக்க முடியாது.

This is short visioned, immetured and biased suitable for the writer only...

This comment has been removed by the author.

racism started by champika in sri lanka

racism started by champika in sri lanka

கட்டுரையாளரின் கருத்து 100 அறிவு பூர்வமானது முஸ்லிம்கள் அடி வாங்கிய இரு கட்சிகளுக்கப்பால் மூன்றாவதாக ஒரு கட்சி இருப்பதை சற்று கவனத்தில் கொண்டால் மிக நன்றாக இருக்கும்

ஜெர்மனியில் ஹிட்லரின்
நாஸிஸ கொள்கைகளை மக்களை நம்பவைப்பதற்கு சில உண்மைகளுடன் பல பொய்களையும் இட்டுக்கட்டிப்பரப்பிய வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்ட " கோயபல்சின்" வாரிசுகளின் தொடர்ச்சியே , இப்படியான கட்டுரையாளர்கள்! மாற்றீடாக அநுரவுக்கு வாக்களிக்க கூறினாலும் நியாயமுள்ளது. ஆனால்?..
மறுமையின் விசாரணையை மறந்தவர்கள்!

Post a Comment