Header Ads



பாகிஸ்தான் மண்ணில், போராடி தோற்றது இலங்கை


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 297ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 133 ஓட்டங்களையும் தசுன் சானக 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் அமீர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் ஃபக்கர் ஷமான் 76 ஒட்டங்களையும், அபித் அலி 74 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நுவன் பிரதீப் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த 1 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

அதனை அடுத்து 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 போட்டித் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.