October 01, 2019

காதி நீதிமன்றில் பாலியல் இலஞ்சம் - 90,000 தமிழ் - சிங்­க­ள­வர் இஸ்லாத்திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம்

இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமிழ், சிங்­க­ள­வர்கள் முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் காதி சட்­டத்தை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் திரு­மண சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் தனி­நபர் பிரே­ரணை ஒன்­றி­னையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ர­வுள்­ள­தாவும் அவர் கூறினார். 

அது­ர­லியே ரதன தேரர் மற்றும் சிங்­கள அமைப்­புக்கள் இணைந்து நேற்று கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இக் கருத்­துக்­களை முன்­வைத்தார். அவர் மேலும் கூறு­கையில்,

திரு­மண சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வர தனி நபர் யோசனை ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்­தி­ருக்கு கொண்டு வர­வுள்ளேன். இன்று (நேற்று) நான் பாரா­ளு­மன்­றத்தில் இதனை சமர்ப்­பித்­துள்ளேன். இன்று திரு­மண சட்டம் மூல­மாக பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் முஸ்லிம் முறை­மைக்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளனர். வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ளது. இதில் 97 வீதம் வற்­பு­றுத்தல் என்றே பதி­வா­கி­யுள்­ளது. இலங்­கையில் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் முறைப்­பா­டுகள் உள்­ளன. 13 வய­துக்கு மேற்­பட்ட சிறு­மிகள் திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்ள நிலை­மைகள் உள்­ளன. இது இலங்­கையில் பாரிய சமூக பிரச்­சி­னை­களை உரு­வா­க்கி­யுள்­ளது.

இவ்­வாறு மாற்றுத் திரு­மணம் செய்­துள்­ள­வர்கள் மீண்டும் விவா­க­ரத்தை செய்­து­கொண்ட நேரங்­க­ளிலும் காதி சட்­டத்தின் பிர­காரம் பிள்­ளைகள் முஸ்லிம் சமூ­கத்தில் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றனர். ஆகவே காதி நீதி­மன்றம் இன்று முஸ்லிம் மக்கள் மத்­தி­யிலும் பாரிய எதிர்ப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.

அதேபோல் தமிழ் – சிங்­கள மக்­களின் எதிர்ப்பும் அதி­க­ரித்­துள்­ளது. காதி நீதி­ப­திகள் என கூறிக்­கொண்டு சட்ட அறிவு இல்­லாத முஸ்லிம் நபர்கள் பலர் செயற்­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்தே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஆகவே இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சமூ­கத்தில் உள்ள அச்சம் கார­ண­மாக வெளியில் கூறாது உள்­ளனர்.

இலங்­கையில் 17 வயது வரையில் கட்­டாய கல்வி அவ­சியம். இவற்றை மீறி இந்த காதி சட்டம் செயற்­பட்டு வரு­கின்­றது. காதி நீதி­மன்­றங்கள் இயங்­கு­வ­தற்கும் அப்பால் பொது­வான சட்­டத்தில் அனை­வ­ரையும் ஒரே சட்­டத்தின் கீழ் கொண்­டு­வர வேண்டும். காதி சட்டம் முற்று முழு­தாக ஆண்­களின் ஆதிக்­கத்தில் மட்­டுமே இயங்­கு­கின்­றது. காதி நீதி­மன்­றத்தில் நியாயம் கேட்டுச் செல்லும் பெண்­க­ளுக்கு பாலியல் இலஞ்சம் கேட்கும் நிலைமை உள்­ள­தாக முறைப்­பா­டுகள் உள்­ளன. ஆதா­ரத்­துடன் நாம் இவற்றை நிரு­பிக்க முடியும். ஆகவே அனை­வ­ருக்கும் ஒரு சட்டம் இயங்க வேண்டும். கற்ற முஸ்லிம் சமூகம் நிச்­ச­ய­மாக இதனை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நாம் கொண்டுவரும் சட்டத்தை சகல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் முன்வைக்கவுள்ளோம்.

ஜனாதிபதியாக வருபவர்கள் இதனை தமது முதல் காரணியாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.

7 கருத்துரைகள்:

இப்படியான பொய்கலை,கட்டுக் கதைகளை தயவு செய்து பிரசுரிக்காதீர்கல்

Can any of our politicians who have a backbone refute his allegations? We know he is working as henchman for some politicians.

ம் தொடங்கிட்டன் சொங்கி மோதி பாரு

ஒவ்வோர் முஸ்லிமும் தஹஜ்ஜத் தொழுது இந்த காபிரையும் அவனைப்போன்ற அவனுடைய பின்னால் இருந்து முஸ்லிம்களின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி அவர்களைக்கேவலப்படுத்தும் அத்தனை காபிர்களையும் மிகவும் கேவலப்படுத்தி உலகில் அவமானப்படுத்தி அழித்துவிடுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். இந்தக் காபிரின் பின்னால் அவனுக்கு தூண்டுதல் வழங்குவது நாட்டின் உயரிய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தான். அத்தனை குப்பார்களையும் அழிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவதைத்தவிர இதற்குவேறு மாற்றீடு கிடையாது.

Theeeeero,

Who could you find this measurement ? May your mouth decay by lies.

Bauththathtai parappame, verothaththai parappum bauththan.

Post a comment