Header Ads



முஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை புறந்தள்ளாது, நட்புறவாக செயற்பட்டால் சிங்கள மக்களின் 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஜாதிக சிந்தனைய அமைப்பின் தலைவரும் சிங்கள தேசியவாதியுமான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜாதிக சிந்தனைய அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் நளின் டி சில்வா இட்டுள்ள குறிப்பில் இதனை கூறியுள்ளார்.

பசில் வாக்கு பிச்சை கேட்காமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய ஆகியவற்றை புறந்தள்ளாது, நட்புறவாக செயற்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் 70 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும்.

எனினும் பசில் மற்றும் அவருடன் இருப்போர் எப்போதும் தம்முடன் இருக்கும் கட்சிகளை புறந்தள்ளி வருவதாக கிடைக்கும் தகவல்கள் நல்லதல்ல.

பசில் தம்முடன் இருக்கும் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டாமல், தமிழ் இனவாத மற்றும் முஸ்லிம் அடிப்படை கட்சிகளுடன் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட விரும்புகிறாரா?.

இது வாக்கு வங்கி அரசியலே தவிர வேறில்லை. எது எப்படி இருந்தாலும் பசில், கோத்தபாய ஆகியோர் சிங்கள வாக்குகளை சிதறடிக்காமல் விட்டால் சரியானது.

பௌத்த சிங்கள வாக்குகள் குறைந்தன் காரணமாகவே மகிந்த கடந்த முறை தோல்வியடைந்தார் எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இவர் பேசுவதே இனவாதம்

    ReplyDelete
  2. This not humanly thinking Rather a racism.

    No country that plant the seeds of racism will develop in long or short run.

    Racism thinking never build a country.

    Rather respect all the citizens equally to build a united SriLanka.

    ReplyDelete
  3. இனவெறி பிடித்த இந்த சிங்கள போராசிரியர் இந்த நாட்டில் சிங்களத் துவேசத்துக்கும் இனப்புறக்கணிப்புக்கும் வித்திடுகின்றான். இது போன்ற மனநோயாளிகள் தான் இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் துவேச காவிகள்.

    ReplyDelete
  4. பழுத்துக் காய்ந்த இனவாதி

    ReplyDelete
  5. Mr. professor ,your have some problem in your brain maybe racicimaniaya , and you have also homa attitude please check the doctor i think u have lost last 5 years remembrance

    ReplyDelete

Powered by Blogger.