Header Ads



5 ஆம் திகதிவரை, பொதுஜன முன்னணிக்கு காலக்கெடு - தயாசிறி

பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது குறித்து சிந்தித்து பதிலளிக்க எதிவரும் 5 ஆம் திகதி வரையில் பொதுஜன முன்னணிக்கு காலக்கெடு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து பயணித்தால் பாதிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று -01- கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இந்நிலையில் நேற்றுமத்தியகுழு கூடிய வேளையில் எம்மால் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியவில்லை. 

காரணம் என்னவெனில் நாம் இப்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம். 

ஆனால் வெறுமனே ஒரு கட்சியாக அல்ல, பொதுவான சின்னம், பொதுவான கொள்கையின் அடிப்படையில் நாம் செல்லவே நினைக்கின்றோம். எனவே எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இறுதித் தீர்மானம் எடுக்க காலக்கெடு உள்ளது என அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.