Header Ads



மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்

மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11-10-2019) கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதி அரச பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றி வருபவர்,  10 ஆம் ஆண்டு கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைப்பித்து அம்மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் தீர்த்து வந்துள்ளார்.

மாணவன் வீட்டிலிருக்கும் போது, குறிப்பிட்ட ஆசிரியை அடிக்கடி கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வந்ததை மாணவனின் தாய் கண்டு சந்தேகம் கொண்டுள்ளார். அத்தாய் மகனுக்குத் தெரியாமல் மகனின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த குறுந்தகவல்களைக் கண்டு விடயத்தை புரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இப்புகாரையடுத்து பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையின் வீட்டிற்கு விரைந்து ஆசிரியையையும் அம்மாணவனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்குமிடையிலான இவ் உறவு கடந்த ஒருவருடமாக இடம்பெற்று வருவதும் மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஆசிரியை 41 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயானவர் என்றும் கணவரை விட்டு பிரிந்து வாழ்பவரென்றும் தெரியவந்துள்ளது.

இவ்விருவரையும் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுன்பு குறிப்பிட்ட மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அம் மாணவனை மொனராகலை வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேகித்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினர் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 comments:

  1. துர் நாட்ராமடிக்குது சிங்களே கலாச்சாரம்....

    ReplyDelete
  2. Please don't publish like this news because every community has this issues. There is issues in another way in our community but Allah only helps our community.
    Thank you.

    ReplyDelete
  3. AbuNuha தயவுசெய்து இனரீதியான வெறுப்பேற்றலை பதிவிடுவது சிறந்ததல்ல
    நாம் அருமையான இஸ்லாமிய கலாச்சார வழிகாட்டலில் வளர்ந்ததால் எமக்கு இது மிகப்பெரிய அருவருப்பாய் இருக்கிறது.
    எம் சமூகத்திடையேயும் ஒருசில வெளிவராத சீர்கேடுகள் ஆங்காங்கே இடம்பெறுவதை காணலாம்.
    உங்கள் துஆவில் ......

    ReplyDelete

Powered by Blogger.